பேனென்று, எண்ணா - நினைத்து, பவ்வம் - கடல்கள், நூறுநூறாம் -
நூறுநூறுகளாகும், வினைப்பகை - கர்மசத்துருக்களுடைய, நிலை -
ஸ்திதியை, தளர்த்தான் - குறைவு பண்ணியவனாகி, புவ்வியோடு -
அபூர்வ கரண குணத்தோடு, நின்று - நிலைபெற்று, அணியட்டி
தன்னையும் - பிறகு அநிவிருத்தி கரண குணத்தையும், புணர்ந்தான்
- சேர்ந்தான், எ-று. (24)
வேறு.
165. காரட்ட மேனி யானுங் கண்டவர் நடுங்கும் வண்ணம்
ஓரெட்டுத் திசைகள் மேலு முருமெனத் தோன்ற வீரன்
ஆராட்டி யோடுங் கூடா வினைப்படைத் தலைவ ராய
வீரெட்டு வினையர் தம்மை யெடுத்தெறிந் திட்டு நின்றான்.
(இ-ள்.) கார் - கருமேகத்தை, அட்ட - ஜெயித்திராநின்ற,
மேனியானும் - சரீரத்தையுடைய வித்துத்தந்தனும், கண்டவர் -
பார்த்தவர், நடுங்கும் - பயப்படும், வண்ணம் - விதமாய், ஓரெட்டுத்
திசைகள் - எட்டுப்பக்கங்களிலும், மேலும் - ஆகாயத்திலும், உருமென
- இடிபோல கர்ஜித்து, தோன்ற - தோன்றித் துன்பத்தைச்செய்ய, வீரன்
- வீரனாகிய முனிவரன், ஆரட்டியோடும் - அநிவிருத்திகரண
குணத்தினோடும், கூடா - சேர்ந்து (அந்தர்முகுர்த்த காலமாகிய
அக்குணஸ்தானத்தின் அந்தியத்து ஒன்பது ஸமயத்தின் முதல்
ஸமயத்தில்), வினை - கர்மங்களின், படைத்தலைவராய -
சேனாதிபதிகளாகிய, ஈரெட்டு வினையர் தம்மை -பதினாறு கருமப்
பிரகிருதிகளை, எடுத்து - தூக்கி, எறிந்திட்டு - அப்புறம் தள்ளிக்
கெடுத்து, நின்றான் - (ப்ரதக்வ விதர்க்க விசாரமென்னும் ப்ரதம
சுக்கிலத்தியானத்தோடு) நிலைபெற்றிருந்தான், எ-று.
பதினாறு பிரகிருதிகள் :- (நாமகர்மத்தில்) நரககதி, தத்கதியானுபூர்வி, திரியக்கதி, தத்கதியானுபூர்வி, ஏகேந்திரியம்,
த்வீந்திரியம், திரீந்திரியம், சதுரியந்திரியம், ஆதபம், உத்யோதம்,
ஸ்தாவரம், சூக்ஷ்மம், சாதாரண சரீரம் எனப் பதின்மூன்றும்,
(தரிசனாவாணீயகர்மத்தில்) நித்திராநித்திரை, ப்ரசலாப்ரசலை,
ஸ்தியானக்கிரந்தி என மூன்றுமாம். (25)
166. மயக்கப்போ ரரசன் மக்கள் வந்தெண்மர் தம்மு ளொன்றிக்
கயக்கறப் பொருது மாயக் காய்ந்தலி மாய்ந்த பின்னை
வியக்கவந் தொருத்தி வீழ்ந்தாள் மெல்லிய ரறுவ ரோடு
முயப்பிழைத் தொருவ னின்றா னொருங்குபோர் தொடங்கி மாய்ந்தான்.
(இ-ள்.) (அப்போது) மயக்கம் - மோஹநீயமாகிய, போர் -
யுத்தத்தைச் செய்யும்படியான, அரசன் - கர்மராஜனது, மக்கள் -
புத்திரர்களான, எண்மர் - எட்டுப் |