பேர்கள், வந்து - சேர்ந்து வந்து, தம்முள் - தங்களுக்குள், ஒன்றி -
மனம் ஒன்றுபட்டு, கயக்கற - சோர்வின்றி, பொருது - தாக்கி, மாய -
இரண்டாவது ஸமயத்தில் மாய்ந்துவிட, காய்ந்து - கோபித்துத் தாக்கி,
அலி - நபும்ஸகவேதமும், மாய்ந்த பின்னை - முன்றாஞ் சமயத்தில் மாய்ந்துபோன பிறகு, (நாலாம் ஸமயத்தில்) வியக்க - ஆச்சரியமாக,
வந்து - வந்து, ஒருத்தி - ஸ்திரீவேதமென்னும் கர்மபிரகிருதி,
மெல்லியர் - அற்ப குணமுடையவர்களாகிய, அறுவரோடும் -
(தனக்குப் பின் ஐந்தாம் சமயத்தில் கெடும்) ஹாஸ்யாதி
அறுவர்களுடனே, வீழ்ந்தாள் - நாசத்தையடைந்தாள், (அதாவது :
அவள் நாசத்தையடைய அவ்வறுவரும் ஐந்தாம் சமயத்தில்
கெட்டார்கள். அவ்வாறு ஹாஸ்யாதி யறுவர்கள் ஐந்தாம் ஸமயத்தில்
கெட), உயப்பிழைத்து - அப்போது நிலைபெறத் தப்பிப்பிழைத்து,
ஒருவன் - புருஷவேதமென்னும் ஒருவன், நின்றான் - தங்கினான்,
(அவ்வாறு நின்ற அவன்) ஒருங்கு - உடனே (ஆறாம்ஸமயத்தில்),
போர் தொடங்கி - யுத்தஞ் செய்யத் தொடங்கி, மாய்ந்தான் -
கெட்டான், எ-று.
எட்டுப்பேர் :- அப்பிரத்தியாக்கியான குரோதம், மானம்,மாயம்,
லோபம், பிரத்தியாக்கியான குரோதம், மானம், மாயம், லோபம்
என்பனவாம்.
அறுவர் :- ஹாஸ்யை, ரதி, அரதி, சோகம், பயம், ஜுகுப்ச்சை
என்பனவாம். (26)
167. கல்மழை கவணிற் பெய்துங் கணைமழை வில்லிற் பெய்தும்
எல்லையி லிடும்பை செய்த லிறைவன்மே லுறாமை நோக்கிப்
புல்லியர் பொறாது நால்வர் போர்முறை மூவர் வீழ்ந்தார்
மெல்லியா னொருவன் வீழ்ந்து கிடந்துபின் மாய்ந்து போனான்.
(இ-ள்.) கல்மழை - சிலா வருஷங்களை, கவணில் - கல்லெறி
கயிற்றினால், பெய்தும் - சொரிந்தும், கணைமழை - அம்பு
வருஷங்களை, வில்லில் - வில்லினால், பெய்தும் - சொரிந்தும்,
எல்லையில் - அளவில்லாத, இடும்பை - துன்பங்களை, செய்தல் - செய்வது, இறைவன்மேல் - முனியின் பேரில், உறாமை -
அடையாமையை, நோக்கி - பார்த்து, புல்லியர் - அற்பர்களாகிய,
நால்வர் - ஸஞ்சுவலன குரோத மான மாயா லோபமென்னும்
நால்வர்களில், பொறாது - சகிக்காமல், மூவர் - ஸஞ்சுவலன குரோத
மான மாயா என்ற மூவர்களும், போர் - யுத்தத்தில், முறை - கிரமமாக
(ஏழாஞ் சமயத்தில் ஸஞ்சுவலன குரோதமும், எட்டாஞ் சமயத்தில்
ஸஞ்சுவலன மானமும், ஒன்பதாவது ஸமயத்தில் ஸஞ்சுவலன
மாயையும்), வீழ்ந்தார் - நாசமடைந்தார்கள், (இந்த
அநிவிருத்திகுணஸ்தானத்தில் இவ்விதமாக முப்பத்தாறு கர்மங்கள்கெட)
மெல்லியான் - மிருதுவாகிய தன்மையையுடைய, ஒருவன் -
ஸஞ்சுவலன லோப மென்னுமொருவன், வீழ்ந்துகிடந்து - தங்கியிருந்து,
பின் - பிற்பாடு, (ஸூக்ஷ்ம ஸாம்பராயகுணஸ்தானத்தின் அந்திய
ஸமயத்திலே) மாய்ந்து போனான் - அவனும் நாசமடைந்தான்,
எ-று. (27) |