86மேருமந்தர புராணம்  


 

பேரின்பத்து -  பெரியதாகிய  அனந்த ஸௌக்கியத்தில், உறைதி - நீ
தங்கியிருப்பாயாக,  உன்னை  -  உன்னை,  நீ - நீ, உன்னுள்ளே -
உன்னுக்குள்ளே,     அனுபவித்து   -   அனுபவித்து,    உலகம் -
இம்மூவுலகத்துக்கும், உத்தமன் - மேலானவன்,  நீயே - நீயேயாகும்,
எ-று.                                                  (36)

வேறு.

177.செறிந்த மாதவன் றிருவடித் தலத்திலிப் படிச்சில
                                          துதிசொன்னார்
   எறிந்த காதியி னெண்குண னாயின னெய்தின னுலகுச்சி
   பறந்து வந்துநற் பழுமரப் பறவையின் பன்னகர் முதலானோர்
   நிறங்கொள் மாமலர் சொரிந்தன ரேத்தினர் வேர்த்தன
                                          வினையெல்லாம்.

     (இ-ள்.)     செறிந்த    -   சேர்ந்திராநின்ற,     மாதவன் -
மஹாதபஸையுடைய     சஞ்சயந்த  பட்டாரகரது,  திரு  -  அழகிய,
அடித்தலத்து  -  பாதமூலத்தில்,  இப்படி  - இந்தப் பிரகாரம், சில -
சிலவாகிய,   துதி  -   ஸ்தோத்திரங்களை,  சொன்னார் - அவர்கள்
சொன்னார்கள்,  (அப்போது)  எறிந்த    அகாதியின்   -    அகாதி
கர்மங்களைக்கெடுத்ததினால், எண்குணனாயினன் - அஷ்டகுணங்களை
யுடையவனாய்,   உலகுச்சி   - உலகுச்சியாகிய ஸித்தி க்ஷேத்திரத்தை,
எய்தினன் -    அவன்    அடைந்தான்,   பன்னகர் முதலானோர் -
பவணலோக    முதலாகிய     மூவுலகத்துள்ள  தேவர்களும், நல் -
நன்மையாகிய, பழுமரம் -  பழங்களையுடைய மரத்தில், பறவையின் -
பட்சிகள்வந்து  சேர்வதுபோல்,    பறந்துவந்து    -  வேகமாகவந்து,
நிறங்கொள் -   நல்ல     நிறத்தைக்கொண்ட,     மாமலர் - சிறந்த
புஷ்பங்களை,    சொரிந்தனர்     - பொழிந்தவர்களாய், ஏத்தினர் -
ஸ்துதித்தார்கள்,   வினையெல்லாம்      -         அவர்களுடைய
கருமங்களெல்லாம்,  வேர்த்தன  -   வேர்த்துப்போயின, (அதாவது :
நிலைதளர்ந்தன), எ-று.                                    (27)

வேறு.

178. அமிர்தினு நஞ்சு கண்ணுக் கழகிதென் றுண்ட வன்போல்
    திமிரமாம் வினையை நீக்கிச் சித்திசெய் தவத்திற் காக்கும்
    அமரன துருவங் கொண்ட முனிவனாங் குமரன் றானும்
    தமரென மகிழ்ந்து நெஞ்சிற் சாலவும் பணிந்து நின்றான்.

     (இ-ள்.)  அமிர்தினும்  - அமிர்தத்தைப்  பார்க்கினும், நஞ்சு -
விஷமானது, கண்ணுக்கு - நேத்திரத்தினது பார்வைக்கு, அழகிதென்று
- அழகாயிருக்கிறதென்று,   உண்டவன்போல்    -      அதனைப்
புசித்தவன்போன்று, திமிரமாம்- மித்தியாத்துவ அந்தகாரத்தினாலாகிய,
வினையை - கருமங்களை, நீக்கி - விலக்கி, சித்தி - ஸித்தியை, செய்
- செய்யும்படியான, தவத்திற்கு - தபத்திற்கு, ஆக்கும் -