சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 87


 

(தெளிவில்லாத தன்மை  பெற்று   அதாவது : மித்தியாத்துவமடைந்து,
சம்சாரத்தை)  ஆக்கும்படியான,  அமரனது  -    பவணதேவனாகிய
தரணேந்திரனது,  உருவங்கொண்ட - ரூபத்தைக்கொண்ட, முனிவனாம்
- பூர்வம்    சயந்தமுனியாகிய,      குமரன்றானும் - இளையனாகிய
தரணேந்திரனும்,     தமரென     - இச்சஞ்சயந்த பட்டாரகர் தனது
பந்துவென்று, நெஞ்சில் - மனதில், மகிழ்ந்து - சந்தோக்ஷித்து, சாலவும்
- மிகவும், பணிந்து - வணங்கி, நின்றான் - நின்றனன், எ-று.    (38)

 179. வில்லொடு கணைகள் வேல்கோல் விட்டெறி பிண்டி பாலம்
     கல்லொடு மரமும் வாவி திடர்படக் கிடந்த காணா
     வெல்லைசெய் தவதி யாற்பார்த் திவன்செய லோவீ தென்னாப்
     பல்லவர் நடுங்க வோடிப் பாதத்தா லுதைப்ப வீழ்ந்தான்.

     (இ-ள்.) வில்லொடு  -  விற்களோடு, கணைகள் - அம்புகளும்,
வேல் - வேல்களும், விட்டெறிகோல் - கைவிட்டெறியும் கோல்களும்,
பிண்டிபாலம் -   பிண்டிபாலம்  என்கிற ஆயுதங்களும், கல்லொடு -
கற்களோடு,   மரமும்   -     மரங்களும், வாவி - அத்தடாகமாகிய
க்ஷேத்திரத்தில், திடர்பட - மேடுபட,கிடந்த - கிடந்தவற்றை, காணா -
கண்டு, எல்லை    செய்து -     அளவுசெய்து, அவதியால் - அவதி
ஞானத்தினால், பார்த்து -   தெரிந்து,   இவன் - இவ்வித்துத்தந்தனது,
செயலோ - செய்கையோ,   ஈது - இது, என்னா - என்று, பல்லவர் -
பலரும், நடுங்க - பயப்படும்படியாக,   ஓடி  -  வேகமாகச் சென்று,
பாதத்தால் -   தனது காலினால், உதைப்ப - உதைக்க, வீழ்ந்தான் -
வித்துத்தந்தன் பூமியில் விழுந்தான், எ-று.                   (39)

 180. மேகபா சத்திற் றோன்று மின்னன தந்தத் தானைப்
     போகபா சத்தின் வந்து பொருந்திய சுற்றத் தோடும்
     நாகபா சத்திற் கட்டா நடுக்கட லிடுவ னென்னச்
     சோகபா சத்தி னாவா யுடைந்தவர் துயர முற்றார்.

     (இ-ள்.)    மேகபாசத்தில்  - மேகக்கூட்டத்திலே, தோன்றும் -
தோன்றுகின்ற,   மின்னன   -    மின்னல்போன்ற,  தந்தத்தானை -
பற்களையுடைய       வித்துத்தந்தனை,          போகபாசத்தில் -
போகவாஞ்சையால்,  வந்து    -   கூடவந்து, பொருந்திய - சேர்ந்த,
சுற்றத்தோடு -   பந்துக்களோடு,  நாகபாசத்தில் - நாகபாசத்தினாலே,
கட்டா     - கட்டி,     நடுக்கடல் - ஸமுத்திர நடுவிலே, இடுவன் -
போடுவேன்,  என்ன -    என்று சொல்ல,   சோகபாசத்தில் - துக்க
ஸமூகத்தால், நாவாயுடைந்தவர் - (கடலிலே) கப்பலுடை பட்டவர்களது,
துயரம் - துக்கத்தை (அதாவது :  கடல்   நடுவில் கப்பலுடைபட்டவர்
அடைந்த     துன்பத்தைப்போன்ற    துன்பத்தை),       உற்றார் -
(வித்தியாதரர்கள்) பொருந்தினார்கள், எ-று.                   (40)

 181. தரணன்றன் கோபங் காணாத் தானவர் தலைவ ரெல்லாம்
     மரணமின் றெய்திற் றொன்னா மயங்கிய மனத்த ராகிச்