88மேருமந்தர புராணம்  


 

 சரணமுன் சரண மென்னாச் சார்ந்தனர் பலருஞ் சோர்ந்தார்
 கரணந்தம் புலங்கள் காணார் கைதொழு திறைஞ்சி மாதோ.

     (இ-ள்.) தரணன்றன் - தரணேந்திரனது, கோபம் - கோபத்தை,
காணா - பார்த்து, தானவர் - வித்தியாதரர்களில், தலைவர் எல்லாம் -
தலைமை பெற்றவர்களெல்லாம்,     இன்று   - இப்போது, மரணம் -
மரணமானது, எய்திற்று -   வந்தது, என்னா  -  என்று,  மயங்கிய -
பிரமித்த,     மனத்தராகி -      மனதுடையவர்களாகி,    கரணம் -
(தப்பித்துக்கொள்ளும்) செய்கையை, தம் -  தங்களுடைய, புலங்கள் -
விஷயங்களில்,  காணார் - (வேறொருவகையிலும்)  அறியாதவர்களாகி,
கைதொழுது - கைகூப்பி, இறைஞ்சி, வணங்கி, உன் சரணம் - (வாராய்
தரணேந்திரனே)   உனது   பாதம், சரணம் - (எங்களுக்கு) ரக்ஷணை,
என்னா -  என்று   சார்ந்தனர்   - அடைக்கலமானார்கள், பலரும் -
அவர்களைச்  சேர்ந்த    வேறு    பல பேர்களும்,    சோர்ந்தார் -
சோர்வுற்றார்கள், எ-று.                                    (41)

182. மின்னொத்த தந்தத் திந்தப் பாவிதான் விதேயத் தின்று
    முன்னைத்தன் பாவத் தாலே முனிவனைக் கொண்டு வந்து
    கன்மொய்த்த திணிதிண் டோளாய் கயத்திடை யிட்டு நம்மைத்
    தின்னத்தா னரக்கன் வந்தா னின்றெனச் செப்ப லோடும்.

     (இ-ள்.)   மின்னொத்த   -   மின்னலைப்போன்ற, தந்தத்து -
பற்களையுடைய,  இந்தப்பாவிதான்  -   இந்தப்  பாபிஷ்டனாகியவன்,
முன்னை - பூர்வத்தில் செய்யப்பட்ட, தன் - தன்னுடைய, பாவத்தாலே
- பாபகருமோதயத்தாலே, இன்று  - இப்போது, விதேயத்து - விதேஹ
க்ஷேத்திரத்தினின்றும்,   முனிவனை -   இச்  சஞ்சயந்த பட்டாரகரை,
கொண்டுவந்து -   தனது    விமானத்தில்  தூக்கிக் கொண்டு வந்து,
கண்மொய்த்த -  கல்லைப்போன்ற,  திணி   -  கெட்டியாகிய,  திண்
தோளாய் -  வலிமைபெற்ற  புயத்தை யுடையவராகிய தரணேந்திரரே,
கயத்திடை -  இந்தத்  தடாகத்தினிடத்திலே,   இட்டு  - தள்ளிவிட்டு,
நம்மை -   நம்மெல்லாரையும்,   தின்னத்தான் -    தின்னும்படியாக,
அரக்கன்   -    ஓரிராக்கதன்,   இன்று  - இப்பொழுது, வந்தான் -
இவ்விடத்தில் வந்திருக்கிறான், என - என்று, செப்பலோடும் - அவன்
சொல்லவும், எ-று.                                       (42)

183. அறிவிலான் சொல்லை மெய்யென் றஞ்சினோ மடையக் கூடி
    மறுவிலான் றவத்தின் றன்மைப் பயத்தைநா மதிக்க மாட்டாச்
    சிறியர்யாஞ் செய்த தீமை பெரியைநீ பொறுக்கல் வேண்டு
    மிறைவனே யெடுத்துக் காட்டா மென்றவர் பணிந்து நின்றார்.

     (இ-ள்.)   அறிவிலான் -  புத்தியில்லாதவனுடைய, சொல்லை -
வசனத்தை,  மெய்யென்று  -   உண்மைதானென்று,  அஞ்சினோம் -
பயந்தவர்களாகி, அடைய -