மாட்சிமையுடைய,சிறப்பு - ஜன்மாபிஷேக கல்யாணத்தை, அமர்ந்தாய்
- (தேவர்களால் செய்யப்) பொருந்தினாய், நீ - நீ, மந்தரத்தின் -
மஹம்மேரு பர்வதத்தில், மாண்ட - மாட்சிமையையுடைய, சிறப்பு -
ஜன்மாபிஷேகத்தை, அமர்ந்து - பொருந்தி, மண்ணுலகத்து -
இந்தப்பூமியில், அந்தரத்தை - தீமைகளை, நீக்கும் - போக்கும், அரசு
- இராஜ்ஜியத்தையும், அளித்தாய் - செய்தருளினாய், எ-று. (50)
191. ஆதியோ டந்தமிலா முத்திக் கிளவரசாய்
மாதவனாய் மண்ணின் மிசையமர்ந்தாய் நீயே
மாதவனாய் மண்ணின் மிசையமர்ந்தோய் வான்புகழே
யோதிய மூவுலகு மேத்தாவா றுண்டோ.
(இ-ள்.) ஆதியோடு - முதலோடு, அந்தமிலா - முடிவுமில்லாத,
முத்திக்கு - மோட்சத்திற்கு, இளவரசாய் - யுவராஜ
பதவியுடையவனாய், நீ - நீ, மாதவனாய் - மஹா
தபஸையுடையவனாக, மண்ணின்மிசை - பூமியின்பேரிலும், அமர்ந்தாய்
- பொருந்தினாய், மாதவனாய் - மஹா தபஸையுடையவனாகி, மண்ணின்மிசை - இப்பூமியில், அமர்ந்தோய் - பொருந்திய
ஸ்வாமியே!, வான்புகழ் - உனது பெரிதாகிய புகழ்ச்சியே, மூவுலகும் -
மூன்றுலோகமும், ஓதிய - சொல்லியன, (ஆகையால்) ஏத்தாவாறு -
உன்னை ஸ்துதிக்காதவகை, உண்டோ - உளதோ? (இல்லை என்றபடி),
எ-று. (51)
வேறு
192. பாடினார் பறவை யெல்லாந் தரையின்மேல் வீழ்ந்தமண்மே
லோடுவார் தாங்க ளெல்லா மொருங்குநின் றுவந்து கேட்டார்
பீடினா லிறைவ னின்றான் பிறங்குதார் நிறங்கொள் சென்னி
யாடுமா னாக ராச னவதியா லதனைக் கண்டான்.
(இ-ள்.) பாடினார் - (மேற்சொன்ன வகையான ஸ்துதிகளை
விநமி, நமி குமாரர்கள் சங்கீதங்களாகப்) பாடினார்கள், (அப்போது)
பறவையெல்லாம் - பட்சிகளெல்லாம், (அச்சங்கீதத்தால்) தரையின்மேல்
- இப்பூமியின்மேல், வீழ்ந்த - வீழ்ந்தன, மண்மேல் - பூமியின்மேல்,
ஓடுவார் தாங்களெல்லாம் - செல்லப்பட்டவர்களெல்லாம், ஒருங்கு
நின்று - ஒன்றுசேர்ந்து நின்று, உவந்து - சந்தோஷித்து, கேட்டார் -
கேட்டார்கள்,பீடினால் - (யோகத்திற் றளர்வின்றிப்) பெருமையினாலே,
இறைவன் - ஸ்வாமியான தலைவன், நின்றான் - சலனமின்றி
இருந்தான், அதனை - அந்த விதத்தை, பிறங்குதார் - விளங்குகின்ற
மாலையை யணிந்த, நிறங்கொள் - பிரகாசங்கொண்ட, சென்னி -
மகுடத்தில், ஆடு - படமெடுத்தாடுகின்ற, மால் - பெரிய, நாகராஜன் -
ஸர்ப்பராஜனாகிய தரணேந்திரன், அவதியால் - அவதிஞ்ஞானத்தால்,
கண்டான் - அறிந்தான், எ-று. (52) |