(இ-ள்.) என்றலும் - என்று சொன்னமாத்திரத்தில், குமரர் -
குமாரர்கள், சொன்னார் - சொன்னார்கள், (எப்படியெனில்)
இறைவன்றன் - நாதனது, பெருமை - மஹாத்மியத்தை, யாமே -
நாங்களே, ஒன்றி - பொருந்தி,அறிதும் - தெரிந்திருக்கின்றோம், நீர் -
நீர், உங்கருமத்து மேலே - உம்முடைய காரியத்தின் பேரில், போம் -
போவீராக, அன்றெனில் - அல்லாவிட்டால், அறிவிலாமை -
மூடத்தனமானது, உம்மை - உம்மிடத்தில், வந்தடையும் - வந்துசேரும்,
என்றார்க்கு - என்று சொல்லிய குமாரர்களிடத்து, இன்று -
இப்பொழுது, நீர் - நீங்கள், இறைவன்தன்னை - பகவானை,
இரக்கின்றது - யாசிக்கின்றது, என்கொல் - என்ன?, என்றான் - என்று
தரணன் கேட்டான், எ-று. (55)
196. அரசராய்ச் சிலரை நாட்டி யரும்பொரு ளீந்து மண்ணை
விரகினாற் கண்டஞ் செய்து வேண்டுவார்க் கீந்து போந்தா
னரசரே நாங்களெங்க ளவனிக்கு வந்தோ மென்ன
வுரைசெய்த பொருளிங் குண்டோ வுறுவனா யிறைவ னின்றால்.
(இ-ள்.) அரசராய் - இராஜாக்களாக, சிலரை - சிலபேர்களை,
நாட்டி - ஸ்தாபித்து, அரும் - அரிதாகிய, பொருள் -
திரவியங்களையும், ஈந்து - (அவர்களுக்குக்) கொடுத்து, மண்ணை -
பூமியை, விரகினால் - கிரமத்தால், கண்டஞ்செய்து - பங்கு செய்து,
வேண்டுவார்க்கு - வேண்டினவர்களுக்கு, ஈந்து - கொடுத்து,
போந்தான் - இவ்விடம் வந்து தபஞ்செய்கின்றான், நாங்கள் -
நாங்களும், அரசரே - இராஜ குமாரர்களே, (ஆகையால்) எங்கள் -
எங்கள் ஸம்பந்தமாகிய, அவனிக்கு - பூமி இராஜ்ஜியத்துக்காக,
வந்தோம் - இவரிடம் வந்தோம், என்ன - என்று குமாரர்கள் சொல்ல,
(தரணன்) உறுவனாய் - முனிவனாய், இறைவன் - நாதன், நின்றால் -
தபஸில் நின்றால், உரைசெய்த - உங்களால் சொல்லப்பட்ட, பொருள்
- பொருள்களானவை, இங்கு - இவ்விடத்தில், உண்டோ -
இருக்கின்றனவோ? (இல்லை என்று சொன்னான்), எ-று. (56)
197. உலகமூன் றுடைய கோமாற் கொன்றுமற் றில்லை யென்றீர்
பலமருந் துண்டு தீராப் பழம்பித்தர் நீவி ரென்ன
நிலமெலாம் பரதனாட்சி யவனுழைச் செல்லு மென்றா
னுலகினுக் குறுதி சொல்ல வும்மையோ விடுத்த தென்றார்.
(இ-ள்.) உலகமூன்றுடைய - மூன்றுலகும் ஆட்சியாகவுடைய,
கோமாற்கு - கோமானாகிய ஸ்வாமிக்கு, ஒன்றும் - யாதொன்றும்,
இல்லையென்றீர் - கிடையாதென்று சொன்னீர், பலமருந்து - பல
ஒளஷதங்களை, உண்டு - தின்றும், தீரா - நீங்காத, பழம் - பழைய,
பித்தர் - பைத்தியத்தையுடையவர், நீவிர் - நீரே, என்ன - என்று
குமாரர்கள் சொல்லவும், நிலமெலாம் - பூமிமுழுதும், பரதன் -
பரதராஜ |