சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 95


 

னுடைய,   ஆட்சி  -  ஆளுகையாகும்,  (ஆகையால்),  அவனுழை -
அவனிடத்தில்,   செல்லும்   -  நீங்கள்   வேண்டியகாரியத்துக்காகச்
செல்வீராக,  என்றான்  - என்று தரணன் சொன்னான், உலகினுக்கு -
இந்த   உலக     ஜனங்களுக்கு,     உறுதி - உறுதியை, சொல்ல -
சொல்வதற்கு,  உம்மையோ    -    உம்மைத்தானோ,   விடுத்தது -
அனுப்பியது,    என்றார் -   என்று குமாரரிருவரும் சொல்லினார்கள்,
எ-று.                                                  (57)

198. மறுவிலாக் குணத்தி னீர்கள் வடிவொடு வாக்குண் டேனு
    மறிவினாற் சிறியீர் சால வப்பனீ ரேலுங் கேண்மின்
    பிறர்வின வாமற் செப்பல் பேர்ந்துழி செறிதல் பின்சென்
    றிறைவரைப் பிரிந்தி டாமை யேழைக ளியற்கை கண்டீர்.

     (இ-ள்.)   மறுவிலா    -   குற்றமில்லாத,   குணத்தினீர்கள் -
குணங்களையுடைய   நீங்கள்,   வடிவொடு  - உருவத்தோடு, வாக்கு
உண்டேனும்   -    (உங்களுக்கு) வசன சாமர்த்தியமிருந்தபோதிலும்,
அறிவினால்    -    புத்தியினாலே,    சால -    மிகவும், சிறியீர் -
ஏழ்மையுடையவர்களாவீர்,    ஏலும்   - இது உங்கட்குப்பொருந்தும்,
அப்பன்நீர்   -    ஐயன்மார்களாகிய    நீங்கள், கேண்மின் - நான்
சொல்வதைக் கேளுங்கள், பிறர் - எதிரிலிருக்கும் மற்றவர், வினவாமல்
- கேளாது விடவும், செப்பல் - (ஒன்றைச்) சொல்லுகிறதும், பேர்ந்துழி
- ஒரு    பெரிய    மனிதன்     நீங்கின விடத்தில், பின் - அவன்
பின்னாலேயே, சென்று - போய், செறிதல் - அவனிடத்தில் சேர்வதும்,
இறைவரை -    பெரியோராயுள்ளவர்களை, பிரிந்திடாமை - பிரியாமல்
கூடவேஹே   யோபாதேயமறியாமல்    சுற்றித்   திரிகிறதும் (ஆகிய
இவைகள்),    ஏழைகள்    -  அறிவில்லாதவர்களுடைய, இயற்கை -
சுபாவமாகும் (என்று தரணன் சொன்னான்), எ-று.

கண்டீர் - அசை.                                        (58)

199. நாதன்பா னாங்க ளொன்று பெற்றுநல் லவர்க ளேத்தப்
    போதலோ டொக்கு மோவிப் பூமியந் தரங்கள் பெற்றால்
    ஆதலாற் பரத னன்றித் தேவர்கோ னளித்த தேனும்
    யாதுநாம் வேண்டல் செல்லோ மினியுரை யொழிக வென்றார்.

     (இ-ள்.) நாதன்பால் - ஸ்வாமியினிடத்தில், நாங்கள் - நாங்கள்,
ஒன்று -  (எங்களுடைய  இஷ்டவஸ்து) ஒன்றை, பெற்று - அடைந்து,
நல்லவர்கள்   ஏத்த - மேலோர் துதிக்க, போதலோடு - செல்வதோடு,
இப்பூமி      அந்தரங்கள்       பெற்றால்    - இப்பூவுலகத்தையும்
விண்ணுலகத்தையும்   பெற்றாலும்,  ஒக்குமோ - அது பொருந்துமோ,
ஆதலால்   -  (எங்களெண்ணம் அவ்விதம்) ஆகையினாலே, பரதன்
அன்றி   -   பரதராஜனே அல்லாமல், தேவர்கோன் - தேவேந்திரன்,
அளித்ததேனும்   -    கொடுத்ததானாலும், யாதும் - எதையும், நாம்
வேண்டல்செல்லோம்   -   நாங்களிச்சிக்கமாட்டோம்,   இனியுரை -
(ஆகையால்)  இனி விருதாவாகப் பேசுவதை, ஒழிக - விடக்கடவீராக,
என்றார் - என்று குமாரர்கள் சொன்னார்கள், எ-று.            (59)