(இ-ள்.) மனமலி - மனதுக்கு நிறைவுபெற்ற, வடக்கிற்சேடி -
உத்தரஸ்ரீணியில், அறுபதுக்கு - அறுபது நகரங்களுக்கு, அரசனாக -
இராஜாவாக, வினமியை - விநமி குமாரனை, நாட்டி - ஸ்தாபித்து,
பூரம் கனக பல்லவத்தை - கனக பல்லவமென்னும் பட்டணத்தை,
ஈந்தான் - அவனுக்கு இராஜாதானியாக வளித்தான், அனையவை -
அத்தன்மையனவாகிய, தெற்கிற்சேடி - தக்ஷிணஸ்ரீணியில், ஐம்பது -
ஐம்பது நகரங்களை, நமிக்கும் -நமி குமாரனுக்கும், ஈந்து - கொடுத்து,
புனைவரும் - வருணித்தற்கரிய, சக்கவாள மிரதநூபுரத்தை - இரதநுபுர
சக்ரவாளமென்னும் பட்டணத்தை, வைத்தான் - இராஜாதானியாக
வளித்தான், அனையவை - அத்தன்மையனவாகிய, தெற்கிற்சேடி -
தக்ஷிணஸ்ரீணியில், ஐம்பது - ஐம்பது நகரங்களை, நமிக்கும் - நமி
குமாரனுக்கும், ஈந்து - கொடுத்து, புனைவரும் - வருணித்தற்கரிய,
சக்கவாள மிரதநூபுரத்தை - இரதநூபுர சக்ரவாளமென்னும்
பட்டணத்தை, வைத்தான் - இராஜாதானியாக ஸ்தாபித்தான், எ-று.
‘புரம்" என்பது, ‘பூரம்" எனச் செய்யுள் விகாரம்பற்றி நீண்டது. (62)
203. விஞ்சைக ளஞ்சு நூறுஞ் சிறியன வேழு நூறுந்
தஞ்சமா யவர்கட் கீந்து தானவர் தம்மை யெல்லா
மஞ்சிநீ ரிவர்க ளாணை கேட்டுவந் திறைஞ்சீ ராகிற்
றுஞ்சினீ ரென்று கொண்மின் மலையுமோர் துகள தாமே.
(இ-ள்.) விஞ்சைகள் - மஹாவித்தைகள், அஞ்சுநூறும் -
ஐந்நூறும், சிறியன - க்ஷுல்லகவித்தைகள், ஏழுநூறும் - எழுநூறும்,
தஞ்சமாய் - துணையாகும்படியாக, அவர்கட்கு - அக்குமாரர்களுக்கு,
ஈந்து - கொடுத்து, தானவர் தம்மையெல்லாம் - வித்தியாதரர்களை
யெல்லாம் (பார்த்து), நீர் - நீங்கள், அஞ்சி - இவர்களுக்குப் பயந்து,
இவர்கள் - என்னால் ஸ்தாபிக்கப்பட்ட இவர்களது, ஆணை -
ஆக்கினையை, கேட்டு - கேட்டு அங்கீகரித்து, உவந்து -
ஸந்தோஷித்து, இறைஞ்சீராகில் - வணங்காமல் போவீர்களானால்,
துஞ்சினீரென்று - இறந்தீர்களென்று, கொண்மின் -
நினைத்துக்கொள்ளுங்கள், மலையும் - பர்வதமும், ஓர் துகளதாம் -
ஒரு தூளுக்குச் சமானமாகும், எ-று. (63)
204. என்றவர்க் கரசு நாட்டி யிலங்குபவன் னகர்க்கு நாதன்
சென்றுதன் பவனம் புக்கான் செழுமணி முடிவில் வீச
வன்றுதொட் டின்றுகாறு மருளும்மிற் பெற்று வந்த
மின்றிகழ் தந்த னந்த வினமிதன் குலத்தி னுள்ளான்.
(இ-ள்.)என்று - என்றுசொல்லி, அவர்க்கு - அக்குமாரர்களுக்கு,
அரசு - இராஜ்ஜியத்தை, நாட்டி - ஸ்தாபித்து, இலங்கும் - விளங்கும்,
பன்னகர்க்கு - பவணதேவர்களுக்கு, நாதன் - அதிபனாகிய தரணன்,
செழு - செழுமை பெற்ற, மணி - இரத்தினத்தினாலாகிய, முடி
கிரீடமானது, வில்வீச - கிரணத்தையெறிக்க, சென்று - போய்,
தன்பவனம் - தனது விமானத்தை, புக்கான் - அடைந்தான், அன்று
தொட்டு - அன்றுமுதல், இன்றுகாறும் - இன்றையவரை |