|
என
என்பதனையும், பற்றுமிடத்தில்
வரும் இடையூறுகளை நீக்குந் தன்மையினையும், பற்றுமிடத்தில் இன்று புதிதாகச் செய்ய வேண்டுவது ஒன்று
இல்லை, 1பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்பதனையும், பற்றுவார்க்கு நினைக்கத்
தகும் மந்திரம் இன்னது என்பதனையும், அவனை வணங்கும் தன்மையினையும் அருளிச்செய்து கொண்டு மற்றைப்
பொருள்களில் வைராக்கியத்தை முன்னிட்டு இறைவனிடத்தில் பத்தியைச்செய்து அடையுங்கோள் என்று
பரோபதேசம் செய்ய மூளுகிறார்.
12
வீடுமின்
முற்றவும், வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை, வீடுசெய் மி(ன்)னே.
பொ-ரை :
பொருள்களிடத்துள்ள ஆசை முழுவதனையும்விடுங்கோள்;
அவ்வாறு விட்டு, உம்முடைய உயிரை, மோக்ஷ உலகத்தையுடைய இறைவனிடத்தில் சேர்த்துங்கோள்.
வி-கு :
‘வீடுமின்’ என்பதனை நீட்டும்வழி நீட்டலுக்கு உதாரணமாகக் காட்டினர் சேனாவரையர். (தொல்.
சொல். சூ. 403.) வீடுமின், செய்மின் என்பனவற்றில் ‘மின்’ முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்று
விகுதி. ‘வீடுமின் முற்றவும்’ என்ற இடத்து ‘விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு,’ என்ற குறட்பகுதியும்,
‘அஃது அப்பொருள்கண்மேற் செல்லின் அந்நுகர்ச்சி விறகு பெற்ற தழல்போல முறுகுவதல்லது அடப்படாமையின்,
வேண்டிய எல்லாம் ஒருங்குவிடல் வேண்டும் என்று கூறினார்,’ என்ற அதனுரையும் ஒப்பு நோக்கத்தக்கன,
‘பரிவுசெய்து ஆண்டு அம்பலத்துப் பயில்வோன்’ (திருக்கோவை 144.) என்புழி,
‘பரிவுசெய்து’ என்பது ஒரு சொல் நீரதாய்ப் பரிந்து எனப் பொருள் கொள்ளபட்டது போன்று, ஈண்டு
‘வீடு செய்து’ வீடுசெய்மின்’ என்பனவும் ஒரு சொல் நீரன.
இப்பதிகம் -
குறளடி நான்காய் வருதலின் வஞ்சித்துறை.
ஈடு :
‘முதற்பாட்டு. ‘மற்றைப் பொருள்களை விட்டு, உங்களுக்கு வகுத்த பொருளைப் பற்றப் பாருங்கள்,’
என்கிறார். ‘வீடுமின்’ என்றதனை ஒரு சொல்லாகக் கோடலுமாம்; அன்றி, நீட்டல் விகாரமாகக்
கோடலுமாம். ‘முதலிலே ‘வீடுமின்’ என்கிறது என்னை?’
1. ‘அடங்குக உள்ளே’ என்றதனைப்பற்றிப் ‘பழைய சம்பந்தத்தையுணர
அமையும்’ என்கிறார். ‘வண்புகழ் நாரணன்’
என்றதனைப்பற்றி, ‘மந்திரம்
இன்னதென்பதனையும்’ என்கிறார். ‘இறை சேர்மின்’ என்றதனைப்பற்றி,
‘வணங்குந்தன்மையினை’ என்கிறார். ‘வீடுமின் முற்றவும்’ என்றதனைப்பற்றி,
‘வைராக்கியத்தை
முன்னிட்டு’ என்கிறார். ‘அந்நலம் புல்கு’ என்றதனைப்
பற்றிப் ‘பத்தியைச் செய்து’ என்கிறார்.
|