|
மய
மய:’ என்றும்,
1‘உணர்முழுநலம்’ என்றும், 2‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும், 3‘சுடர்ஞான
இன்பம்’ என்றும், 4‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ என்றும்
கூறலாம்படி இருக்கும். புல்கு - குணஞானமுடையவனுக்கு, குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம்
5அங்கநாபரிஷ்வங்கம் போன்று போகரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.
பற்று அற்றே - அது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே
புல்கு. இறைவன் 6‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.
(4)
16
அற்றது பற்றுஎனில்,
உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில், அற்றுஇறை பற்றே.
பொ-ரை :
புறம்பேயுள்ள ஆசை நீங்குமாயின், உயிரானது மோக்ஷத்தை யடைந்ததாம்; நிலைபெற்ற மோக்ஷத்தையுடைய
விரும்பினால், அந்தக் கைவல்ய இன்பத்தினையும் அழித்து, அவ்விறைவனுக்கே தீர்ந்து அவனைப் பற்றுவாயாக
என்றபடி,
வி-கு :
‘காரணமற்றபொழுதே காரியமும் அற்றதாம் முறைமை பற்றி, ‘பற்றற்றகண்ணே’ என்றார்; ‘அற்றது பற்றெனில்,
உற்றது வீடு’ என்பதூஉம் அது பற்றி வந்தது,’ என்பது பரிமேலழகருரை, (குறள், 349) ‘உற்றது’ என இறந்த காலத்தாற் கூறியது, தெளிவு பற்றி, ‘அது செற்று’ என மாற்றுக. ‘மன்னுறில் அற்று இறை
பற்றே’ என்றதனால், மேலே ‘வீடு’ என்றது, கைவல்யத்தைக் குறித்தது. ‘மன்னவுறில்’ என்பது மன்னுறில்
என விகாரப்பட்டது.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 7இறைவனைப்பற்றுமிடத்து
வருகின்ற இடையூற்றை நீக்குந் தன்மையினை அருளிச்செய்கிறார். இங்கு
1. திருவாய்.
1. 1 : 2.
2. திருவாய்.
8. 8 : 2.
3. திருவாய்.
10. 10 : 10.
4. ஸ்ரீ ஆளவந்தார் தோத்தீர ரத்நம்.
5. அங்கநா
பரிஷ்வங்கம் - பெண்ணின் கல்வி.
6. திருவாய்.
7. 2 : 7.
7. ‘இடையூறு’ ஆவது, ‘அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்’ என்னும்
ஆத்தும அனுபவம். ‘நீக்குந்தன்மை’ என்றது,
‘அது செற்று’ என்றதனை
நோக்கி.
|