|
1
1‘நா
வாயில் உண்டே’ என்பனவற்றை நினைவு கூர்க. உள்ளி - உள்ள இம்மூன்றையும் ஆராய்ந்து; ‘இவற்றை
எதற்காகப் படைத்தான்? இவைதாம் இப்போது இருக்கிறபடி என்?’ என்று ஆராய்ந்து பார்த்தால்,
அவை அடையத்தகாத பொருள்களில் அன்புடன் கூடியிருத்தல் விளங்கும். கெடுத்து - அவற்றினின்றும்
மீட்டு. இறை உள்ளில் ஒடுங்கு - பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே
பாய்ச்சுவாரைப் போன்று, அடையத்தக்க பொருளில் ஆக்கப் பார். அதாவது, கரணங்களை அவன்
விஷயத்தில் அன்புடன் இருக்கச் செய் என்றபடி.
(8)
20
ஒடுங்க அவன்கண்,
ஒடுங்கலும் எல்லாம்
விடும்பின்னும் ஆக்கை, விடும்பொழுது எண்ணே.
பொ-ரை :
அவ்விறைவனிடத்தில் சென்று சேரவே, உங்களிடத்தில்
வந்து சேர்ந்திருக்கின்றன எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;
1.
முதல் திருவந். 95.
மேற்கோள்
பாசுரங்கட்குப் பொருள் :
தாமுளரே - தந்தம்மைத்
தேட வேண்டாவே. தம் உள்ளம் உள்
உளதே - எனக்குச் சற்றுப்போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு
நெஞ்சு
தரல்வேண்டும் என்று தனிசு (கடன்) வாங்க வேண்டாவே. தாம் உளரானால்
உண்டான நெஞ்சம்
உண்டே என்றபடி. தாமரையின் பூ உளதே - நைக்கு
எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே. ‘தாமரையின் பூ
உளதே’ என்றது, எல்லா
மலர்களுக்கும் உபலக்ஷணம். ஏத்தும் பொழுது உண்டே - காலத்தை
உண்டாக்கி வைத்தானே.
அதனைத் தனிசு வாங்க வேண்டாவே. வாமனன்,
தன் உடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளன் ஆவான்
ஒருவனாய்
இருந்தானே. திருமருவுதாள் - அவனுடைய ஐஸ்வரியப் பிரகாசமான
திருவடிகள். மருவு சென்னியரே
- இப்படிப்பட்ட திருவடிகளில்
சேருகைக்குத் தலையாக்கி வைத்தானே. செவ்வே அரு நரகம் சேர்வது
அரிது - இப்படி இருக்கச்செய்தே, இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடித்
தேடிக்கொண்டு போகிறபடி
எங்ஙனேயோ?
நா வாயில் உண்டே
- இது முன்னம் புறம்பு தேடிப் போகவேண்டாவே.
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -
ஆயிரம்
எழுத்துக்களைக் கொண்டது ஒரு மந்திரம்போல அன்றி எட்டு எழுத்தாய்
நடுவே பிரிவு இல்லாதே
சொல்லலாந்திருப்பெய்ர உண்டாக்கி வைத்தானே.
மூவாத மாக்கதிக்கட் செல்லும் வகை உண்டே -
மீண்டும் வருதல் இல்லாத
மோக்ஷத்தை உண்டாக்கி வைத்தானே. என் ஒருவன் தீக்கதிக்கண் செல்லுந்
திறம் - இங்ஙனே இருந்த பின்பு இவர்கள் தண்ணிய வழி தேடிப் போகிறபடி
எங்ஙனேயோ!
|