|
அதற
அதற்குமேல், உயிரானது
உடலை விட்டு நீங்குங்காலத்தை எண்ணி இரு என்பதாம்
வி-கு :
‘ஒடுங்க, விடும்’ என முடிக்க, கண் என்பது,
ஏழனுருபு. ஒடுங்கலும் - உம் அசைநிலை. இனி, இதனை ‘எல்லாம்’ என்ற சொல்லோடுங் கூட்டி ஒடுங்கலும்
எல்லாமும் விடும் எனப் பொருள் கூறலுமாம். எண் என்பது, முன்னிலை ஏவல். ஏகாரம்: அசைநிலை.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு. இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்த ஞானம் உண்டாகவே தன் சிறுமை பார்த்து
அகல வேண்டா என்றும், வணங்குதலாவது - இவன், இறைவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பு
ஆக்குகை என்றும் அருளிச் செய்தார், மேல் இரண்டு திருப்பாசுரங்களால்; ‘இது தன்னரசு நாடாய்
அடையத் தக்க பொருள் அவன் அல்லாமையால் வழி படாது இருக்கின்றேமோ! வழிபட ஒட்டாமல் தடுக்கும்
விரோதிகள் மிகுதியாக இருத்தலால் அன்றோ நாங்கள் வழிபடாது இருக்கிறோம்?’ என்ன,
‘நீங்கள் அவனைக் கிட்டவே அவை அடைய விட்டுப் போம்,’ என்கிறார் இத்திருபாசுரத்தில்.
அவன்கண் ஒடுங்க
- 1பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று
சேர, ஒடுங்கலும் எல்லாம் விடும் - செய்யத்தக்கனவற்றைச் செய்ய, தகாதவை எல்லாம் தாமாகவே
விட்டுநீங்கும்; ஆத்துமாவின் சொரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே, சொரூபத்துக்கு விரோதிகளாக
உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி. ‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன
அல்ல; ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது. இனி, ‘ஒடுங்கல்’
என்பதனை 2மெலித்தல் விகாரமாகக் கொண்டு ‘இவனுக்குக் குறைவைப் பிறப்பிக்குமவை’
எனலுமாம். எல்லாம் விடும் - அறிவின்மை, கருமம், 3வாசனை, ருசி இவையெல்லாம்
அடியோடே
1. பிரகாரம்
- விசேடணம்; பிரகாரி - விசேடியம் ; சரீர சரீரங்கள்.
2. ‘மெலித்தல்
விகாரமாகக்கொண்டு’ என்றதற்கு, ‘ஒடுக்கல்’ என்ற சொல்
‘ஒடுங்கல்’ என வந்துளது என்பது
கருத்து.
3. வாசனை
- முன்பு செய்து போந்தவற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான
சம்ஸ்காரம்; இது ஹேது பேதத்தால்
பல வகைப்படும். ருசி - வேறு
சுவைகளாலும் மீட்க ஒண்ணாதபடி ஒன்றிலே செல்லும் விருப்பம். இதுவும்
விஷய பேதத்தாலே பல வகைப்படும்.
|