|
New Page 1
துரியோதனன் நிலை.
1ஸ்ரீராமாவதாரத்திலும் இராவணன் படைகளுடன் கூடினவனாய்க்கொண்டு எடுக்கப்புக்க இடத்தில்
நெஞ்சிற் பகையாலே எடுக்க மாட்டிற்றிலன்; 2திருவடி தனியனாய் இருந்தும் நெஞ்சில்
செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்; இங்ஙன் அன்றாகில் ‘இராவணனுக்குக்
கனக்க வேண்டும்’ என்றும், ‘திருவடிக்கு நொய்தாக வேண்டும்’ என்றும் அன்றே? ஆதலால், பொருள்
தன்மை இருக்கும்படி இது. 3‘இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற
பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில்
பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ 4‘இராவணன் முதலிய பகைவர்களால்
பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய
அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ என்பன ஸ்ரீராமாயணம்.5
மலர்மகள்
விரும்பும் - இவ்விரண்டுக்கும் அடி இவளுடைய சேர்த்தியே. மலரில் மணம் போலேமலரை இருப்பிடமாகவுடையளாய்,
1. இச்சரித்திரத்தின்
விரிவைக் கம்பராமாயணம் முதற்போர்ப் படலத்தில்
200 முதல் 214 முடியவுள்ள செய்யுள்களிற்காண்க.
2. திருவடி
- அனுமான். அனுமானைச் ‘சிறிய திருவடி’ என்றும், கருடனைப்
‘பெரிய திருவடி’ என்றும்
கூறுதல் வைணவப் பெரியார்களின் மரபு.
திருவடியைத் தாங்குவதால், ஊர்தியைத் ‘திருவடி’ என்றனர்.
3. ஸ்ரீராமா.
யுத். 59 : 111.
4. ஸ்ரீராமா.
யுத். 59 : 120
5. இங்கு,
‘உள்ளி வெம்பிணத்
துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’
என்னும் கம்பராமாயணச்
செய்யுள்கள் நோக்கல் தகும்.
|