|
ச
சமைந்து, முதல் இல்லாதனவும்
கேடு இல்லாதனவும் ஒளிவளரப்பெறுவனவும் ஆன நற்குணங்களையுடையவனாய், வீடாகிய தெளிந்த உலகத்தினைக்
கொடுக்குந் தன்மை எக்காலத்தும் நீங்காதவனாய், ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பல பிறவிகளையுடையவனாய்,
எளிமை வருதலை இயல்பாகவுடையவன் என்பதாம்.
வி-கு :
‘முதல் இல, கேடு இல’ என்பன, நலத்திற்கு அடைமொழி. இறையோன் என்பதற்கு ஐந்தாம் பாட்டின்
விசேடக்குறிப்பில் எழுதியதை நினைவு கூர்க. ‘நிலைமையது’ என்பதில் ‘அது’ பகுதிப் பொருள் விகுதி.
‘அமைந்து’ என்னும் எச்சத்தை ‘எளிவரும்’ என்பதில் உள்ள வரும் என்னும் வினையுடன் முடிக்க.
ஈடு :
இரண்டாம் பாட்டு ‘எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது
பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி
கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி
முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக்கூட்டங்கள் மொய்த்துக்
கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று
இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப்பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப்
போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக்கொண்டிருந்த இடத்தைகாட்ட, அவ்விடத்தைக்
கண்டவாறே 2‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்
1. ‘பெருமாளும்
பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல்
புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’
எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே
காணப்படுகின்றனவே! ஆதலால்,
பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’
(அயோத். 88. 14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப்பெருமாள் ஆச்சிரமத்தினின்று
நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான்
வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன;
பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின்,
சிறந்த காவல்
செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை
பெறுவதும்.
2.
ஸ்ரீ ராமா. அயோத். 87 : 4.
|