|
என
என்பதனைத் தெரிவிக்கும்பொருட்டு
‘இறையோன்’ என்கிறார் என்னலும் ஆம். அளிவரும் அருளினோடு - குளிர்ந்து பக்குவமான
அருளோடே. இனி, இதற்கு, ‘அருளால் வரும் அருளோடே’ என்று பொருள் கூறி, ‘அருளால் வரும் அருளாவது,
காரணம் இன்றியே செய்யும் திருவருள்,’ என்று கூறலுமாம். அகத்தனன் - அடியார்கட்குக் கழுத்திலே
ஓலை கட்டித் ‘தூது போ’ என்னலாம்படி இருப்பான். புறத்தனன் - அடியார் அல்லாதவருக்கு அந்நிலை
தன்னிலே கிட்ட ஒண்ணாதபடி இருப்பான். அமைந்து - இப்படிச் சமைந்து.
‘இறையோன்,
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனனாய் அமைந்து, முதல் இல கேடு இலவாம் ஒளிவரும் முழுநலம்,
வீடாம் தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய், நிலை வரம்பில் பல பிறப்பாய், எளிவரும்
இயல்வினன்’ எனச்சொற்களைக் கூட்டிப் பொருள் முடிவு காண்க.
(2)
25
அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற உயர்ந்து
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை அறநிலம்
அதுவாம்
அமைவுடை அமரரும் யாவையும் யாவருந் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே?
பொ-ரை :
பயனோடு கூடியிருக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றிலும் உயர்வில் மிக உயர்ந்து,
அமைதலையுடைய படைத்தல் அழித்தல் இடையிலே அழித்தல் ஆகிய இவற்றின் முடிவின் எல்லையில் நிற்கின்ற
அறிவு ஆற்றல்கள் அமைந்திருக்கின்ற பிரமன் முதலிய தேவர்களும், அஃறிணைப் பொருள்களும் உயர்திணைப்
பொருள்களும் ஆகிய எல்லா உயிர்களும், தானே ஆகும்படி பொருந்தி இருக்கின்ற நாராயணனுடைய பிறவியின்
தன்மையினை அறிபவர் எவர்தாம்? ஒருவரும் இலர் என்றவாறு.
வி-கு : முதல் இரண்டு அடிகளும் அமரர்கட்கு அடைமொழி. ‘உயர்ந்து அமைவுடைய அமரரும்’ என்றும்,
‘அமைவுடை முதல் கெடல் இடை ஒடிவு அற நிலம் அதுவாம் அமைவுடை அமரரும்’ என்றும் கூட்டுக. பிரளயம்
முடிந்தவுடன் செய்யப்படும் படைத்தலையும், நாடோறும் செய்யப்படும் படைத்தலையும் ‘முதல்’ என்ற
சொல்லாலும்,
|