|
தன
தன்மையை நினைத்துப்
1‘பிறவித் துயர் அற, ஆழிப்படை அந்தணணை மனத்து வைத்து, ஞானத்துள் நின்று துறவிச்
சுடர் விளக்கந் தலைப்பெய்வார்’ என்கிறபடியே, ஆத்தும அநுபவம் அமையும் என்று இருக்குமவனும் சர்வேஸ்வரனை
வழிபட்டு வணங்கலும், 2உடலை விட்டு உயிர் நீங்குங்காலத்து இறைவனை நினைத்தலும் வேண்டும்.
ஆத்தும அநுபவத்தை நெகிழ்ந்து சர்வேஸ்வரனுடைய குணங்களை அநுபவிக்க வேண்டும் என்று இருக்குமவனும்
அவ்விறைவனையே 3உபாயமாகப் பற்றல் வேண்டும்.
‘மேற்கூறிய தத்துவங்கள்
மூன்றனுள் அசித்து, சித்து இவற்றின் தன்மைகளைக் கூறி, ஈஸ்வரன் தன்மையினைக் கூறாது ஒழிவான்
என்?’ என்னில், இவற்றுள், ஒன்றனை அறியிலும் அறியும் அவ்வறிவு 4‘ஒண்தாமரையாள்
கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு,’ என்கிறபடியே, சர்வேஸ்வரன் அளவிலே சென்று முடிந்து அல்லது
நில்லாது. மற்றும், ‘ஒருவனையே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால் பகவானுக்கு வேறுபட்ட பொருள்களைப்
பற்றிப் பிறக்கும் ஞானம் எல்லாம் அஞ்ஞானத்தோடு ஒக்கும்: ஆதலால், ஞானமாகில் திருமகள்
கேள்வனைப் பற்றியல்லது நில்லாமையின் சர்வேஸ்வரனைப் பற்றித் தனியே ஈண்டுக் கூறப்படவில்லை.
5‘பகவானை அறிகிற அந்த ஞானந்தான் ஞானம் என்று சொல்லப்படும்; ஆகையால், மேற்சொல்லிய
ஞானத்திற்கு வேறானவை எல்லாம் அஞ்ஞானமாகச் சொல்லப்பட்டன,’ என்றும், 6‘பந்தத்தை
உண்டாக்காத தொழிலே தொழில்; மோக்ஷத்தை உண்டாக்கும் கல்வியே கல்வி; மற்றைத் தொழில்கள்
எல்லாம் வருத்தத்தை
1. ஸ்ரீகீதை. 7 : 29
2. ‘“உயிர்
உடம்பின் நீங்குங்காலத்து அதனான் யாதொன்று பாவிக்கப்பட்டது,
அஃது அதுவாய்த் தோன்றும்,’
என்பது எல்லா ஆகமங்கட்குந் துணிபாகலின்,
வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாகிய
பாவனை
கெடுதற்பொருட்டுக் கேவலப்பொருளையே பாவித்தல் வேண்டும். அதனால்,
அதனை முன்னே பயிறலாய
இதனின் மிக்க உபாயமில்லையென்பது அறிக,”
என்பர் பரிமேலழகர்.
(குறள். 358.)
3.
உபாயம் - வழி
4.
முதல் திருவந். 67.
5.
ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 5 ; 87.
6.
ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19: 41.
|