|
க
காட்டுகிறது. மற்றும்,
இவர்தாமும் இதனைப் பின்னர்க் கூறுமிடத்து, ‘பேரும் ஓர் உருவமும்’ என்று அருளிச்செய்தல் காண்க.
பேரும் ஓர்
உருவமும் - இவற்றுள் ஒரு திருப்பெயரும் ஒரு திரு உருவமும். உளது இல்லை-அடியர் அல்லாதார்க்குத்
தூலமாக நினைப்பதற்கும் அரியனவாய் இருக்கும். இலது இல்லை - அடியார்க்கு எல்லாம் காணலாம்
ஆகையாலே இல்லது இல்லை. 1பிணக்கே-இதில் மாறுபாடு உண்டோ? இல்லை என்றபடி. அடியார்கள்
எல்லாம் காண்கையாலே வாழ்த்துக் கூறுவார்கள்; அடியர் அல்லாதார் இவை இல்லை என்று இருக்கையாலே
முதலிலேயே கிட்டார்கள்; ‘இவ்விருவர்க்கும் நடுவே பொருள் நித்தியமாகப் பெற்றோமே!’ என்று
தாம் இனியர் ஆகிறார். இனி, ‘பேரும் ஓர் உருவமும் உளது, இலது இல்லை, இல்லை பிணக்கே’ என்பதற்கு,
பேரும் ஓர் உருவமும் உளது-திருப்பெயரும் திருபெயருக்குப் பொருளான திருமேனியும் நித்தியம்; இல்லது
இல்லை; இல்லை பிணக்கே; ஆதலால், இவ்விஷயத்தில் விவாதம் வேண்டா என்கிறார் என்று
கோடலும் ஆம்.2
(4)
27
பிணக்கற
அறுவகைச் சமயமும்
நெறிஉள்ளி
உரைத்த
கணக்கறு
நலத்தனன் அந்தமில்
ஆதியம்
பகவன்
வணக்குடைத்
தவநெறி வழிநின்று
புறநெறி களைகட்டு
உணக்குமின்
பசைஅற அவனுடை
உணர்வுகொண்டு
உணர்ந்தே
பொ-ரை :
(அறுவகைப்புறச்சயங்களுக்கு வைதிக சமயத்தோடு) பிணக்கு அறும்படி (மறைகளிற்கூறியுள்ள
பொருள்களின்) வழிகளை நினைந்து கூறிய கணக்கு இல்லாத நற்குணங்களையுடையவனும், முடிவில்லாத அழகிய
ஆதிபகவனும் ஆன இறைவன் கூறிய வணக்கத்தையுடைய பத்தி நெறியிலே நின்று, அவன் விஷயமானது அறிவினால்
(அறியவேண்டுவனவற்றை) அறிந்து, அவற்றுக்குப் புறம்பாக உள்ள வழிகளாகிற களைகளைப் பறித்து,
பின்னும் அவற்றை ஈரமும் அற்றுப்போமாறு உலர்த்துங்கோள் என்றவாறு.
1.
‘பிணக்கே’ என்பதில், ஈண்டு ஏகாரம் எதிர்மறை.
2. இங்குப்
‘பிணக்கே’ என்பதிலுள்ள ஏகாரம் ஈற்றசை.
|