முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
163

சப

சப்தத்தை இட்டுத் தலைக்கட்டுகையாலே, தானே முதல்வன் என்று தோன்றும்படி இருப்பவன். இப்படி வேறுபட்ட தன்மையராய் இருக்கிற இவர்களை; ஒன்றநும் மனத்து வைத்து - அவனை ஒழிந்த இருவரிலே ஒருவனுக்கு உயர்வு வேண்டும் என்றாதல், உறுதிப் படுத்துவதற்கு முன் இவனுக்கு உயர்வு வேண்டும் என்றாதல் பாராதே ஒரு படிப்பட உங்கள் மனத்திலே வைத்து. உள்ளி-சுருதி நியாயங்களால் ஆராய்ந்து அவர்கள் சொரூப சுபாவங்களை இப்படி ஆராய்ந்தவாறே ஒருபொருள் பிரதானமாய் ஏனைய இரண்டும் உயர்வு இல்லாதனவாய்த் தோன்றும். தோன்றினவாறே, நும் இருபசை அறுத்து - அவ்விரு பொருள்களிலும் நீங்கள் செய்யும் நசையைத் தவிர்ந்து. அவ்விரு பொருள்களுக்கும் இயற்கையாக வருவது ஓர் உயர்வு இல்லை; நீங்கள் ஏறிடுகின்ற இவையே என்பார், ‘நும் இருபசை’ என்கிறார். நன்று என நலம் செய்வது அவனிடை - இப்படி உறுதி செய்யப்பட்டவன் பக்கலிலே ‘இவன் நமக்குக் கைப்புகுந்தான்,’ என்று உங்களுக்கு ஏறத்தேற்றம் பிறக்கும்படி வேறு பலனைக் கருதாத பத்தியைப் பண்ணப் பாருங்கள். ‘காலக் கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறி இருந்தார்கள்; நம்முடை நாளே - கெடுகின்றவர்களே! நம்முடைய வாழ்நாளின் நிலையை அறிவீர்கள் அன்றோ! விரைவில் அடைவதற்குப் பாருங்கள். ‘நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், 1‘மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? 2‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, 2‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், 3நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.

(7)

 

1. திருவாய். 1. 2 : 2.

2. ஸ்ரீராமா. அயோத். 105 : 24.

3. ‘நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம்
  அருளிச்செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
  இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.