|
என
என்னும்படி ஆயிற்று இவர்
நிலை. ஆக, 1‘அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்?’ என்கிறபடியே,
உபய விபூதியிலும் அடங்காது இருப்பார். 2மற்றும், 3‘ஓ மைத்திரேயரே,
கலியுகத்தில், உலகத்திற்குத் தலைவனும் எங்கும் நிறைந்திருப்பவனும் எல்லாரையும் படைத்தவனும்
ஈஸ்வரன் என்ற பெயரை உடையவனும் ஆன திருமாலை, 4பாஷண்டிகளால் கெடுக்கப்பட்ட மக்கள்
வழிபடுகின்றார்கள் இலர்,’ என்கிறபடியே, ‘கலி காலத்தில் பகவானிடத்தில் ருசி ஒருவர்க்கும்
பிறவாது,’ என்றும், 5‘மனிதசரீரம் கிடைத்தல் அரிது; கிடைப்பினும், கிடைத்த அச்சரீரமும்
கணநேரத்தில் அழியுந்தன்மையது; அழியாதிருப்பினும், ஸ்ரீ வைகுண்டநாதனே நமக்குப் பற்றுக்கோடு என்னும்
ஞானம் உண்டாதல் மிகவும் அரிது என்று நான் நினைக்கிறேன்,’ என்கிறபடியே, ‘முதலில் மனித
சரீரம் கிடையாது; பெற்றாலும் சர்வேஸ்வரனே அடையத் தக்கவன் என்று அவனைப் பெறுகைக்குத் தக்கதாய்
இருப்பது ஒரு வழியை மேற்கொள்ள வேண்டும் என்னும் ருசி ஒருவர்க்கும் பிறவாது; இது உண்டாகிலும்
உண்டாம்; அடியார்கட்கு அடிமை என்னும் எண்ணம் உண்டாகாது என்னுமிடம் சொல்ல வேண்டாவே,’ என்றும்
வருவனவற்றை ஓர்க. மற்றும் 6‘மனிதர்களில் ஆயிரவருள் ஒருவன் சித்தியின்பொருட்டு
முயல்கின்றான்; அங்ஙனம் முயல்கிற ஞானிகள் ஆயிரவருள் ஒருவன் என்னை அறிகிறான்; இது உண்மை,’
என்று சர்வேஸ்வரன் தானும் அருளிச் செய்தான்.
1.
திருவிருத்தம், 75.
2.
பகவானுடைய அநுபவத்துக்குத் தேசதோஷத்தால் மேட்டு நிலமான
அளவேயன்றிக்கே காலத்தின் சுபாவத்தாலும் மேட்டு நிலம் என்கிறார்
‘மற்றும்’ என்று தொடங்கி.
3.
ஸ்ரீவிஷ்ணு புரா. 6. 41.
4.
பாஷண்டிகள் - நாஸ்திகர்கள்; பாவத்தை உண்டுபண்ணுகிறவர்கள்.
5.
பாகவதம், 11. 2: 22.
‘மானிடராக வரலரி தோர்மண் டலத்தினெறி
மானிடராக மிலாதவ ராதன் மலரயனார்
மானிடராகமத் தாலன்ப ராய அரங்கத்துளெம்
மானிடராக மலரடிக் காட்படும் வாழ்வரிதே.’
என்ற திவ்விய கவியின் திருவாக்கு ஈண்டு ஒப்பு நோக்குக.
6.
ஸ்ரீகீதை. 7: 3.
|