|
இப
இப்படியிருக்கிற
இவ்வுலகத்திலே ஆழ்வார் வந்து அவதரித்த இது 1சேதனர் செய்த நல்வினைப் பயன் ஆயிற்று.
‘யாங்ஙனம்?’ எனின், 2‘தேவகி கருத்தரித்த பிறகு எல்லா உலகங்களாகிற தாமரையை
மலர்த்துவதற்காக, தேவகியாகிற கீழைச்சந்தியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன்
உதித்தான்,’ என்கிறபடியே, சர்வேஸ்வரன் வந்து அவதரித்தபடி ‘என்னை?’ எனின், 3சூரியன்
புறவிருளைப் போக்குவான்; சர்வேஸ்வரன் மனவிருளைப் போக்கிக்கொண்டிருப்பான்; அப்படியே, இவ்வாழ்வாரும்
4‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற’ என்றும்,
5‘மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவுமால்’ என்றும், 6பாலேய்
தமிழர் இசைகாரர் பத்தர் பரவும்’ என்றும், 7பாட்டாய தமிழ்மாலை ஆயிரத்துள் இப்பத்தும்,
கேட்டு ஆரார் வானவர்கள் என்றும், 8‘பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத்
தான் பாடித்
1.
சேதனர் - ஆத்துமாக்கள்; சேதனம் - அறிவு. ‘சேதனம் என்னுமச்
சேறுஅகத்து இன்மையால், கோதென்று
கொள்ளாதாங் கூற்று,’ என்பது
நாலடியார்.
2. ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 3: 2.
3.
‘சுடரிரன் டேபண்டு மூன்றா யினதுகள் தீர்ந்துலகத்
திடரிரண்
டால்வரும் பேரிருள் சீப்பன வெம்பிறப்பை
அடரிரண் டாமலர்த்
தாளுடை யான்குரு கைக்கரசன்
படரிருங்
கீர்த்திப் பிரான்திரு வாய்மொழிப் பாவொடுமே:’
(சடகோபரந். 2.)
‘ஆதித்ய ராமதிவாகர
அச்சுதபானுக்களுக்குப் போகாத உள்ளிருள் நீங்கி,
சோஷியாத பிறவிக்கடல் வற்றி, விகசியாத
போதிற்கமலம் மலர்ந்தது
வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே.’
(ஆசார்யஹ்ருதயம்)
‘வெள்ளி
வியாழன் விளங்கிரவி வெண்டிங்கள்
பொள்ளென நீக்கும் புறவிருளை; - தெள்ளிய
வள்ளுவ
ரின்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்ளிருள்
நீக்கும் ஒளி.’
(திருவள்ளுவமாலை, 52.)
என்பனவற்றை ஈண்டு ஒப்பு
நோக்குதல் தகும்.
4. திருவாய். 6. 7: 2.
5. திருவாய். 6. 5: 9.
6. திருவாய்.
1. 5: 11.
7. திருவாய். 10. 6: 11.
8. திருவாய், 10. 7: 5.
|