|
New Page 1
‘இல்லை’
என்று தள்ளிக்கதவு அடைத்தபோதோடு வேற்றுமை அறமுகமலர்ந்து போம்படி இரப்பிலே தழும்பு ஏறின
வடிவையுடையனானான் ஆதலின், ‘மாணாய்’ என்கிறாள். உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன்
சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் 1‘கொள்வன் மாவலி மூவடி’ என்று இரந்த
வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர் திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து
ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை
வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல்,
2‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும்,
3‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன்
என்றே கிடக்கும்’ என்றும், 4‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று,
ஒன்று ஒருகால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், 5‘முன்னங்குறளுருவாய்
மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ என்றார். ஆக, இவர்கள்
எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.
மதியிலேன்-‘பிரிகிற
சமயத்திலே, ‘போகாதேகொள்’ என்றேனாகில் இப்பாடு படாது ஒழியலாம் அன்றோ? அது செய்திலேன்;
ஆதலால், அறிவுகேடியானேன்,’ என்கிறாள். வல்வினையே மாளாதோ- இவள் 6ஒரு தீர்க்கசிந்தயந்தியாவள்.
‘மதியிலேன் வல்வினையே மாளாதோ’ என்றதனால் மதியினையுடைய ஒருத்தியின் வல்வினை மாண்டது என்பது
உட்கோள். அதாவது, சிந்தயந்தி என்பாள் சதுரப்பாட்டினையுடையளாய் மாமியார் முதலானாருடைய
முன்னிலையிலேயே இருவினைகளையும் நீக்கி மோக்ஷத்தினை அடைந்தாள் என்னும் சரிதம் ஈண்டு நினைத்தல்
தகும். ‘ஆயின், அவள் இருவினைகளையும்
1. திருவாய். 3. 8 : 9.
2. திருவாய். 1. 3 : 10.
3. திருவாய். 5. 3 : 5.
4. திருவாய். 5. 4 : 10.
5.
பெரிய திருமொழி. 9. 4 : 2.
6.
சிந்தயந்தி என்பவள், ஓர் ஆயர் மடமகள், அவளினின்று இவளை
வேறுபடுத்திக் காட்டுகிறார்
‘இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தி’ என்று.
|