| என 
என்னும் நினைவினள் ஆதலின்,
‘ஓர் வாசகம்’ என்கிறாள். ‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ 
எனின், 1‘தாரான் தரும் என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே 
சொன்னக்கால்’ என்றார் பரகால நாயகியார். 2‘செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் 
ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ என்றார் சூடிக்கொடுத்த 
சுடர்க்கொடியார். 3‘கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ 
என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே’ என்றார் இவ்வாழ்வார் நாயகியும். தான் 
4ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்; அப்பறவைகளால் 
தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே. ‘நம்பியேறுதிருவுடையான்தாசர் திருநாட்டுக்கு 
நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கு என்று எழுந்து நின்று, ‘அவர் 
ஸ்ரீவைஷ்ணவர்களுடன் பரிமாறும் படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்று 
அருளிச்செய்தார் என்ற ஐதிஹ்யம் இங்கு ஓர்தல் தகும். 
(5) 
 39 
        அருளாத நீர்அருளி 
அவர்ஆவி துவராமுன்அருள் ஆழிப் புட்கடவீர் 
அவர்வீதி ஒருநாள்என்று
 அருள்ஆழி அம்மானைக் 
கண்டக்கால் இதுசொல்லி
 யருள்ஆழி வரிவண்டே! 
யாமும்என் பிழைத்தோமே?
 
 பொ-ரை : 
வட்டமான வரிகளையுடைய வண்டே! அருட்கடலான எம்பெருமானைக் கண்டால், ‘அருள் செய்யாத நீர் திருவருள் 
புரிந்து, தலைவியினுடைய உயிர் உலர்வதற்கு முன்னர், அருட்கடலான கருடப்பறவையினை அவர் வீதியில் 
ஒரு நாள் மட்டும் செலுத்துவீர்’ என்று இவ்வார்த்தைகளைச் சொல்லியருள்; வாராத தாமேயன்றி, 
யாமும் எக்குற்றத்தைச் செய்தோம்?
 
1. 
சிறிய திருமடல்.2. நாய்ச்சியர் திருமொழி, 13 : 9.
 3. திருவாய். 
4. 7 : 3.
 4. ஜனககுலசுந்தரி-சீதாபிராட்டி, இப்பதிகத்தின் முன்னுரையைக் காண்க.
 |