|
ஆச
ஆசாரியனுடைய ஆத்துமகுணத்தைப்
போன்றே, உருவத்தின் குணமும் உட்கோள் என்கை, யாமும் என் பிழைத்தோம் - ‘நாங்கள் என்ன
தப்புச் செய்தோம்? தாம் பிரிந்து துவளவிட்டு வைத்தது போன்று, 1நாங்களும் கிரமத்திலே
பெறுகிறோம் என்று ஆறியிருந்தோமோ? 2விலங்கின் காலில் விழுவாரும், தூது
விடுவாரும் தாமாக இருக்க, 3அத்தலை இத்தலையாகியும் வாராது இருக்கிற தம்மதோ, எங்களதோ
குற்றம்?’ என்பாள், ‘யாமும் என் பிழைத்தோம்?’ என்கிறாள்.
(6)
40
என்புஇழைகோப்
பதுபோலப் பனிவாடை ஈர்கின்ற
என்பிழையே நினைந்தருளி
அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின்
தகவினுக்கென்று ஒருவாய்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே!
யான்வளர்த்த நீயலையே?
பொ-ரை : எலும்பினைச் செதுக்குகின்ற இளமை பொருந்திய
கிளியே, எலும்பினைத் தொளைத்து அத்தொளையில் நூலினிழையைக் கோத்தலைப் போன்று, குளிர்ந்த
வாடைக்காற்று அறுக்கிறது; என் குற்றங்களையே நினைந்து அருள் செய்யாத திருமகள் கேள்வனிடத்தில்
சென்று, ‘சுவாமியான உம்முடைய பொறுமைக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று ஒரு வார்த்தை
சொல்லல் வேண்டும்; நான் வளர்த்த நீ அல்லையோ?
வி-கு :
வாடை ஈர்கின்ற - ஒருமை பன்மை மயக்கம், நினைந்தருளி - ஒரு சொல். திருவடி - கடவுள்;
கடவுளையும் பெருயோர்களையும் ‘அடிகள்’ என்று கூறுவது இருவழக்கிலும் உண்டு. ‘திருவடியை நாரணனைப்
பரஞ்சுடரை’ என்பர் மேலும் வாய் - வார்த்தை. சொல் - முன்னிலை ஏவல். ‘வாடை ஈர்கின்ற’ என்னுமிடத்தில்,
‘தண் என்று, இன்னாது எறிதரும் வாடையொடு, என்னாயினள்கொல் என்னாதோரே’ என்ற குறுந்தொகைச்செய்யுளை
(செய். 110.) நினைவு கூர்க.
ஈடு :
ஏழாம் பாட்டு. ‘தத்தமுடைய குற்றங்களைப் பாராமல்,
‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ வேண்டுவது என்று அவர்க்குக்
கருத்தாக, ‘எங்கள்
1.
காதலன் பிரிந்த காலத்தில் ஆறியிருத்தல் காதலிக்குக் குற்றம்.
2.
விலங்கு - சுக்கிரீவன்.
3. அத்தலை - தலைவன். இத்தலை - தலைவி. அதாவது, தலைவனுக்குரிய
தன்மைகளைத் தலைவி அடைந்தும் என்பது
பொருள்.
|