|
New Page 1
குற்றம் ஒன்றுமேயோ
பார்ப்பது? தம்முடைய அபராதஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை
இரக்கிறாள்.
என்பு இழை
கோப்பது போலப் பனி வாடை ஈர்க்கின்ற-எலும்பினைத்தொளைத்து அதிலே கடினமானது ஒரு கயிற்றினைக்
கோத்தது போன்று நஞ்சு ஊட்டின வாடையானது அறுக்கின்றது. எலும்பும் நரம்புமேயாம்படி உடல்தான்
மிகவும் இளைத்தது ஆதலின், உடல் என்னாது ‘என்பு’ என்கிறாள். 1‘பம்பா
நதிக் கரையின் சோலையிலிருந்து வருங்காற்று’ நாயகனுக்கு இருந்தது போன்று, இருக்கிறதுகாணும் இவ்வாடை
இவளுக்கு. நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிலந்தவாறே, 2அந்தர ஜாதி காலிலே துகை
உண்பதே இப்படி. 3‘மனைவியானவள் இப்படி வாடைக்கு இடைந்து நோவு படாநிற்க, இதனை
நீக்குதற்கு, அவர் கடல் அடைத்தல், படை திரட்டல் ஆகிறபடி என்?’ என்னில், என் பிழையே நினைந்தருளி-நான்
படுகிற துன்பம் போராது என்று 4கீழாண்டைச்சிகை வாசியா நின்றார். அதாவது, அடியார்களுடைய
குற்றங்களை அறியாதவராய் இருந்தமை தவிர்ந்து, 5‘கணக்கு அற்ற ஞானங்களையுடையவர்’
என்கிறபடியே, இப்போது குற்றங்களை அறிவதில் முற்றறிவினராய் இருக்கிறார் என்றபடி, அருளாத திருமாலார்க்கு-இதற்குக்
6‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் அருகே இருக்க, எங்கள் குற்றம்
பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகை
1. ஸ்ரீராமா. கிஷ்கிந்.
1 : 105,
2. அந்தர ஜாதி காலிலே - ஆகாயத்தில் உண்டாகிற காற்றாலே. ‘தாழ்ந்த
சாதியின் கால்களிலே’
என்பது தொனிப்பொருள்.
3. ‘மனைவியானவள் இப்படி’ என்று தொடங்கும் வாக்கியம், மேலே கூறப்புகும்
பொருளுக்கு அவதாரிகை.
இவ்வாக்கியம் எதிர்மறை இலக்கணை.
4. கீழாண்டைச்சிகை - பழங்கணக்குகளிலே நிற்கிற நிலுவை.
5. ஸஹஸ்ரநாமம்.
6. ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.
|