|
அஞ
அஞ்சுகின்ற தன்மையருமாய்
இருப்பர். 1‘நான் சக்கரவர்த்தியிடத்தில் தமப்பன் முறையைப் பார்க்கின்றிலேன்;
எனக்கு ஸ்ரீ ராம பிரானே தமையனும் சுவாமியும் உறவும் தமப்பனுமாக இருக்கின்றான்’ என்கிறபடியே,
பெருமாளையே எல்லா உறவுமாகப் பற்றின இளைய பெருமாளைப் போன்று, இவரும் 2‘சேலேய்
கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாந் தாய் தந்தையும் அவரே’ என்று பகவானே அடையத்
தகுந்தவர் என்னும் உறுதியை முடிவாக உடையராய் இருப்பர். 3‘நான் இரவு பகல் எந்நேரத்திலும்
எல்லா அடிமைகளையும் உமக்குச் செய்வேன்; நீரோ, பிராட்டியோடு மலை அடிவாரங்களில் இன்புற்றிரும்,’
என்று இளைய பெருமாள் எவ்வகைத் தொண்டுகளையும் செய்து அல்லது தரியாதது போன்று; இவரும்,
4‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்று
எல்லா அடிமைகளும் செய்து அல்லது தரியாத தன்மையராய் இருப்பர்.
5‘ஓ
ஜனார்த்தனரே, உம்முடைய கல்யாண குணங்களின் சேர்க்கையையும், விபூதி நியமனத்தையும் மீண்டும்
விரிவாகக் கூறுக; ஏன் என்றால், உம்முடைய மாகாத்மியமாகிய அமிருதத்தைக் கேட்கும் எனக்குத் திருப்தி
கிடையாது,’ என்று கூறிய அருச்சுனனைப் போலவும், 6‘சமீபத்தில் வருகிற ஸ்ரீ ராமபிரானைப்
பார்த்துக்கொண்டேயிருந்தும் தசரத சக்கரவர்த்தி திருப்தி அடைந்திலன்,’ என்று கூறப்படுகின்ற
தசரத சக்கரவர்த்தியைப் போலவும், இவரும் காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் அநுபவித்தாலும்
7‘அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராஅமுதமே’ என்னும்படி மேன்மேல் எனப் பெருகி
வருகின்ற அமையாத காதலையுடையராய் இருப்பர்.
‘நன்று; மேல்
8‘இவர்க்கு ஒப்புச் சொல்லல் ஆவார் ஒருவரும் இலர்,’ என்று கூறி இங்குச் சிலரை
ஒப்புச் சொல்லல்
1. ஸ்ரீராமா. அயோத். 58 : 31.
2. திருவாய்மொழி, 5. 1 : 8.
3. ஸ்ரீராமா. அயோத். 31 : 25.
4.
திருவாய்மொழி, 3. 3: 1.
5.
ஸ்ரீ கீதை. 10 : 18.
6. ஸ்ரீராமா. அயோத், 3 : 29.
7. திருவாய்மொழி, 2. 5 : 4.
8.
பக். 16 பார்க்க.
|