முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
211

New Page 2

‘இராஜபுத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள். இதனை இங்கு நினைவு கூர்க. ஒரு வாய் சொல் - ஒரு வார்த்தை சொல்லு. என்பு இழைக்கும் இளங்கிளியே - இளமையாலும், அன்புடன் கூடிய சொற்களாலும், வடிவில் பசுமையாலும், வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டுபண்ணுவதனால், எலும்பைச் சிதைக்கின்ற கிளியே! இனி, ‘என்பு இழைக்கும்’ என்று பிரிக்காமல், என் பிழைக்கும் என்று கொண்டு, ‘என் நிலையை அறிவித்தால் என்ன தவறு உண்டாம்?’ என்று கோடலுமாம். யான் வளர்த்த நீ அலையே - திருமகள் கேள்வனாய்த் தான்தோன்றியாய் இருப்பார் செய்வனவற்றை வயிற்றில் பிறந்தாரும் செய்வரோ? இனி, இதற்குக் ‘கலந்து பிரிந்தார் செய்வனவற்றை வளர்த்தவர்களும் செய்வர்களோ?’ எனலுமாம். இனி, ‘அவன் தான் இப்படிச் செய்யவேண்டும் என்று செய்தானோ? என்னுடைய சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தான்? அப்படி, என்னுடைய சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு, நீ நலியச் சொல்லவேண்டுமோ?’ என்பாள், ‘யான் வளர்த்த நீயலையே’ என்கிறாள் என்றுகூறலுமாம். இனி, ‘எனக்குத் தகுந்தாற்போலே அன்றோ நீயும் இருப்பாய்’ உன்மேல் குறையுண்டோ?’ என்பாள், அங்ஙனங் கூறுகின்றாள் என்றலும் ஒன்று.

(7)

41

        நீயலையே சிறுபூவாய்! நெடுமாலார்க்கு என்தூதாய்
        நோய்எனது நுவல்என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
        சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான் இனிஉன்து
        வாய்அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே.

 

  வந்து நின்றீர் நீர்; அழகிதாயிருந்தது உம்முடைப் போக்கு? கஸ்தேந
  ஸந்திஷ்ட திவாஙநிதேஸே - சாஸ்திரவஸ்யமன்றிக்கே கண்டதிலே கடுகச்
  சாபலத்தைப் பண்ணி மீளமாட்டாத விலங்குளை நீரே ‘இழந்த போகங்களை
  புஜிப்பது’ என்று சேர்த்துவிட்டு. நீர் சொன்னவற்றைச் செய்தன என்று
  தலையறுக்க வந்து நின்றீர்; இப்படிச் சொல்லாம்படியன்றே இவர்
  பொறையிருப்பது?’ என்பது அச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த
  பொருள்.