|
New Page 1
பொ-ரை :
‘சிறிய நாகணவாய்ப் பறவையே, அடியரானார்க்கு இரங்கும் பெரும்பித்தரான தலைவர்க்கு என் தூதாகிச்
சென்று, என் நோயினைச் சொல்வாய் என்று யான் கூறவும், கூறாமல் இருந்துவிட்டாய்; அதனால்,
காரியத்தைக் கெடுத்தது நீ அன்றோ? இப்பொழுது, யான் சாயலும் அழகிய மாமை நிறமும் நீங்கப் பெற்றேன்;
இனிமேல் உனது வாயலகில் இனிய உணவினை ஊட்ட வல்லவர்களைத் தேடிக் கொள்வாய்,’ என்றவாறு.
வி-கு :
பூவை வேறு, கிளி வேறு; ‘பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கி’ என்றார்
தேவரும். (சிந். 2510.) பூவை என்னும் ஐயீற்றுப் பெயர், விளி ஏற்றலின் ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது.
சாயல் - மென்மை. ‘சாயல் மென்மை’ என்பது தொல்காப்பியம். மாமை - அழகு; இதன் நிறம் - மாந்தளிர்
(குறுந் 331.) அசோகந்தளிர் (கலித். 15.) ஆம்பலின் நார் உரித்த மெல்லியதண்டு (நற்.
6.) இவற்றின் நிறத்தைப் போன்றது என்று கூறுவர். ‘உள் ஊரும் பசலைநோய் எனக்கே தந்துஎன்,
ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே’ என்றார் திருமங்கை மன்னனும். அடிசில் என்பது, உண்பன
தின்பன நக்குவன பருகுவனவற்றிற்கு எல்லாம் பொதுப்பெயர்.
ஈடு :
எட்டாம் பாட்டு. முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது,
இவள் உறாவப்புக்கவாறே தானும் உறாவப்புக்கது; அத்தைப் பார்த்து, 1‘முன்னரே என்
நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்; நானோ, முடியாநின்றேன்; இனி, உன்னைக்
காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
நீ அலையே - ‘என்
நிலையை அறிவிக்க வேண்டும் என்ன, அறிவியாதே இருந்த உன்னாலே வந்தது அன்றோ இது! என்னாலே
என்கிறது என்? வாராது இருந்த குற்றம் அவனது அன்றோ?’ என்ன, அறிவித்தால் வாராதிருந்தானாகில்
அன்றோ அவனுக்குக் குறையாம்? நேரே சம்பந்தம் எம்பெருமானோடேயாய் இருக்கவும், ‘ஞானத்தை எந்த
ஆசாரியனிடமிருந்து பெறுகிறானோ அவனை முதலில் வணங்கக் கடவன்,’ என்கிறபடியே, செய்த உபகாரத்தை
நினைந்து ஆசாரியனை விரும்புவது போன்று, இவளும் பூவையைப்
1.
‘நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்’ என்று இப்பொழுது
சொல்லுகையாலே, ‘என் நிலையை அறிவி’
என்று முன்னர்க் கூறியது
பெறுதும்.
|