முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
215

மக

மகாராசருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை, சிறிது நேரத்திற்கு முன் வாலி கையில் நெருக்குண்டு போனவர் இப்போது இப்படித் தெளிந்துவந்து 1அறைகூவுகிற இது வெறுமன் அன்று; இதற்கு ஓர் அடி உண்டு, என்றது போல இவ்வாடைக்கு ஓர் அடி உண்டாக வேண்டும் என்று நினைத்தாள்; நினைந்து, ‘இராசாக்கள் இராசத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாறு போன்று, நம்மை நலிகைக்காகச் சர்வேஸ்வரன் இவ்வாடையை வரவிட்டானாகவேண்டும்’ என்று பார்த்து, வேற்காரர் கொடுபோம் நலியப்புக்கவாறே 2‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று, ‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால், ‘அத்தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில், அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.

    நாடாத மலர் நாடி - ‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர் நஞ்சீயர், 3‘எண்திசையும் உள்ள பூக்கொண்டு’ என்கிறபடியே, ‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச்செய்வர். நாடோறும்-இதுதான் ஒரு நாள் தேடி விடுதல் அன்றி இடைவிடாமல் என்றபடி. கிஞ்சித்கரித்துச் சொரூபத்தைப் பெறுகின்ற இவ்வாத்துமாவிற்கு, இடைவிடுதல் சொரூபத்திற்கு இழுக்கு ஆதலின், ‘நாடோறும்’ என்கிறாள். நாரணன்தன்-இடைவிடாமல் தொண்டுகளைச் செய்யத் தக்கவாறு எல்லாப்பொருள்கட்கும் சுவாமியானவன். வாடாத மலர் அடிக் கீழ்-செவ்வி மாறாத பூப்போன்று இருக்கிற திருவடிகளின் கீழே. 4சொரூபத்திற்கு இழுக்கு ஆனாலும் விட ஒண்ணாதபடி எல்லையற்ற இனிய பொருளாகவுமிருக்கிற திருவடிகள் ஆதலின், ‘வாடாத மலரடி’ என்கிறாள். வைக்கவே-சேர்ப்பதற்காகவே. வகுக்கின்று-உண்டாக்

 

1. அறை கூவுதல்-போருக்கு அழைத்தல். ஓர் அடியுண்டாக வேண்டும்-ஈஸ்வரன்
  அடியாக இருத்தல் வேண்டும்.

2. ‘நிதியுண்டு என்பாரைப்போன்று’ என்றது, பாசுரத்தில் ‘வைக்கவே வகுக்கின்று’
  என்றதனை நோக்கி.

3. திருவாய். 4. 7 : 8.

4. ‘சொரூபத்திற்கு இழுக்கு ஆனாலும்’ என்றதன் கருத்து, இவ்வுயிர்கள்
  நாராயணனுக்கு உரிமைப்பட்டவை அல்லவாயினும் என்பது.