|
ஊ
ஊடு ஆடு பனி வாடாய்-வேற்காரர்
1அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி இங்குத்தை வார்த்தையை அங்கே சொல்லித்
திரியுமாறு போன்று, அங்கோடு இங்கோடாய்த் திரிகின்றதாயிற்று. இனி, ‘ஊடு’ என்பதற்கு ‘உள்’
என்றும், ‘ஆடுகை’ என்பதற்குச் ‘சஞ்சரிக்கை’ என்றும் பொருள் கொண்டு, ‘அங்கே அந்தரங்கமாகச்
சஞ்சரிக்கின்ற நீ’ என்றும், ‘புணர்ச்சிக்காலத்தில் என்பால் கிட்டிச் சஞ்சரித்துப் போந்த
நீ’ என்றும் பொருள் கோடலுமாம். உரைத்து ஈராய் எனது உடலே-‘நித்தியமான தொண்டினைச் செய்வதற்கு
இட்டுப் பிறந்த இவ்வாத்துமா இப்படியிருக்கக்கடவதோ?’ என்று அறிவித்தால், அத்தலையால்
வருங்கைங்கரியமும் நமக்கு வேண்டா,’ என்று இருந்தானாகில், ‘அவசியம் வந்து அவனுடைய
பிரிவிற்குச் 2சிளையாத என் உடலை முடித்துவிட வேண்டும்,’ என்று காலைப் பிடித்து வேண்டிக்கொள்ளுகிறாள்.
(9)
43
உடல்ஆழிப் பிறப்புவீடு
உயிர்முதலா முற்றுமாய்க்
கடல்ஆழி நீர்தோற்றி
அதனுள்ளே கண்வளரும்
அடல்ஆழி அம்மானைக்
கண்டக்கால் இதுசொல்லி
விடல்ஆழி மட நெஞ்சே!
வினையோம்ஒன் றாமளவே.
பொ-ரை :
‘ஆழ்ந்ததாய், சுவாதீனமாக உள்ள மனமே, உடலினுடைய வட்டமான பிறப்பு, அவ்வவ்வுடல்களில் தங்கியிருக்கின்ற
உயிர்கள் முதலாகவுள்ள எல்லாவற்றையும் உண்டாக்குவதற்காக ஆழ்ந்துள்ளதான நீரையுடைய கடலை உண்டாக்கி,
அக்கடல் நடுவண் யோகநித்திரை செய்கிற, பகைவரைக் கொல்லுகிற சக்கரத்தையுடைய இறைவனைக் கண்டால்,
இதனைச் சொல்லி, வினையினையுடைய நாம் அவனோடு சேருமளவும் அவனை விடாதேகொள்,’ என்கிறாள்.
வி-கு :
உயிர் தங்குதற்கு இடமாக இருத்தலின் உடலை ‘வீடு’ என்கிறாள்; விடுதல்-தங்குதல். ‘ஆய்’ என்னும்
எச்சத்தைக் ‘கண்வளரும்’ என்பதுடன் முடிக்க. கண்டக்கால்-வினையெச்சம், ‘பயனில் சொல் பாராட்டு
வானை மகனெனல்’ (குறள். 196.) என்புழிப் போன்று, ஈண்டு ‘விடல்’ என்பது எதிர்மறை வியங்கோள்.
‘வினையோம்’ என்றது, மனத்தை உளப்படுத்திய பன்மை.
1. அங்குத்தை - அவ்விடம்.
2.
சிளையாத-சலியாத, ‘காலைப்பிடித்து’ என்றது, சிலேடை; கால்-பாதமும்,
காற்றும்.
|