முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
231

அவ

அவளை அடைதலால், அவளை அணைந்தது போன்று இருக்கையாலே ‘தழுவிய’ என்கிறார். எந்தாய் என்பன - ஏழ் எருதுகளையும் அடர்த்த செயலுக்குத் தோற்று, நப்பின்னைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தையும் சொன்னேன். நினைந்து - சொன்ன அளவேயோ! நெஞ்சாலும் நிந்தித்தேன். நைந்தே - அவ்வளவேயோ! பிறர் அறியும்படி சிதிலனாய் உடலாலும் நிந்தித்தேன்.

    இனி, இத்திருப்பாசுரத்திற்கு 1‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றேன்; ‘எத்திறம்’ என்றேன்; பிராட்டிமார் நிலையை அடைந்து தூது விட்டேன்’ என்று, அவற்றுக்கு வருந்துகிறார் என்று பொருள் கூறலும் ஒன்று.

(1)

46

        நினைந்து நைந்துஉள் கரைந்துஉருகி
            இமையோர் பலரும் முனிவரும்
        புனைந்த கண்ணி நீர்சாந்தம்
            புகையோடு ஏந்தி வணங்கினால்
        நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
            வித்தாய் முதலிற் சிதையாமே
        மனஞ்செய் ஞானத்து உன்பெருமை
            மாசூ ணாதோ மாயோனே!


    பொ-ரை :
ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனே! தேவர் பலரும் முனிவர் பலரும் மனத்தால் நினைந்து, அந்நினைவினால் நிலை குலைந்த உடல்களையுடையவர்களாய், பின்னர் மனமும் கட்டுக் குலைந்து தண்ணீரைப் போன்று உருகி, அவ்வுருக்கத்தோடு தொடுத்த மாலைகளையும் தண்ணீரையும் சந்தனத்தையும் நறுமணமிக்க புகையோடு ஏந்தி வந்து வணங்கினால், நினைக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய், காரியமாக மாறும்போது தானான தன்மையில் நின்று சிறிதும் வேறுபடாததாய் இருக்கின்ற, மனத்தால் நினைக்கிற

 

1. ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றேன்’ என்றது, வளவேழ் உலகின்
  முதலாய வானோ ரிறையை’ என்றதனை நோக்கி. ‘எத்திறம் என்றேன்’
  என்றது, ‘களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா’ என்றதனை நோக்கி.
  ‘பிராட்டியார் நிலையையடைந்து தூதுவிட்டேன்’ என்றது, ‘இளவேறேழுந்
  தழுவிய எந்தாய்’ என்றதனை நோக்கி. ‘வருந்துகிறார்’ என்றது, ‘நைவன்’
  என்றதனை நோக்கி.