|
இ
இருப்பவர்கள் ஆகையாலே
தொடுக்கும் போது தொடங்கி, ‘அவன் இதனைக் கண்டருளக் கடவனே, சாத்தியருளக் கடவனே,’ என்று
அன்போடு தொடுத்த மாலை, ஆராதனஞ்செய்யும் போது தன்மை நோக்குகையால் உண்டாகும் சிரமம்
ஆறுகைக்கு 1அர்க்கியம் கொடுக்கைக்காக உண்டாக்கின தண்ணீர், பிறகு சாத்தியருளுவதாகச்
சமைத்த சந்தனம் முதலியவைகள், தூபங்காட்டுவதற்கு உண்டாக்கின அகிற்புகை இவை தொடக்கமானவற்றைத்
தரித்துக் கொண்டு வந்து, செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவார்கள். அவன் இவைகொண்டு காரியங்
கொள்ளுமதிலும் 2‘சூட்டுநன் மாலைகள் தூயன ஏந்தி’ என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று
தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும், பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின்,
அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக்கொண்டு நிற்கக் காணுமதனையே
பேறாக நினைத்திருப்பனாதலானும் ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.
நினைந்த எல்லாப்
பொருள்கட்கும் வித்தாய் - தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும்
காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை
அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக
வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து 4‘ஸதேவ’ என்று
கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன்
ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத்
தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு;
அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் - கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப்
பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற
எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’
1. அர்க்கியம் - தண்ணீரைக்கொண்டு தேவர்கட்கும் அதிதிகட்கும்
செய்யப்படும் ஒருவகை உபகாரம்.
2. திருவிருத்தம், 21.
3. சங்கல்ப ரூப ஞானம் - நினைவின் வடிவமான ஞானம்.
4. சதேவ - ஒருவனே.
|