| என 
என்று பொருள் அருளிச்செய்வர்
பிள்ளையமுதனார். முதலில் சிதையாமே - அவற்றை உண்டாக்குமிடத்துத் தானான தன்மையில் 
குறை வாராதபடி இருப்பான். அதாவது - விசேடணங்களான சேதன அசேதனங்களினுடைய சொரூப சுபாவ விகாரங்கள் 
விசேடியமான பரம்பொருள் உருவத்தில் இல்லை 2என்றபடி. ‘ஆயின், அப்படி உளதாமோ?’ 
எனின், மட்பிண்டமானது பானை, அகல் முதலிய பொருள்களாக மாறியவுடனே அம்மண் உருண்டையான உருவம் 
அழிந்துவிடும்; இங்கு அது இல்லை. ‘நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று 
இவன் படி,’ என்கிறார். மனம் செய் ஞானத்து உன் பெருமை - இப்படி இருக்கிற சங்கல்ப ரூப ஞானத்தையுடைய 
உன் பெருமை உண்டு. உன் வேறுபட்ட தன்மை 3அது ‘ஆயின், உலகிற்குக்காரணம், சங்கல்ப 
ரூப ஞானமோ?’ எனின், அன்று; ‘சூக்கும சித்து அசித்துகளுடன் கூடின இறைவனே உலகிற்குக் காரணம்; 
ஆயினும், இவ்விறைவன் காரணமாகும்போது சங்கல்பம் முன்னாக ஆதல் வேண்டும். ‘ஆயின் சங்கல்பத்தையுடைய 
அவ்விறைவன் காரணமாதல் வேண்டும், சங்கல்பம் காரணமாகாதே?’ எனின், 4‘நான் பல 
வகைப் பொருள்களாக விரிகிறேன்,’ என்கிற சங்கல்பத்தின் முக்கியத்துவத்தாலே ‘மனஞ்செய் 
ஞானத்தைக்’ காரணமாக அருளிச்செய்கிறார்.
 மாசு உணாதோ - 
இவர்கள் வணங்கினால் மாசு உணாதோ? ‘தன் சங்கல்பத்தாலே எல்லாப் பொருள்களையும் உண்டாக்குகிறவனுக்கு, 
அவனாலே படைக்கப்பட்ட நாம் தீண்டிய பொருள் அங்குத்தைக்குத் தக்கதாமோ? என்று தந் தாமுடைய 
தாழ்மையை நினைந்து, அகலு
 
1. 
விசேடணம் - அடுத்திருப்பது. விசேடியம் - அடைகொளி.
 2. ‘சின்னூல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பி பின்னும், அந்நூல் அருந்தி
 விடுவது போல அரங்க ரண்டம், 
பன்னூறு கோடி படைத்தவை யாவும்
 பழம்படியே, மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே’ 
என்றார்
 பிள்ளைப்பெருமாளையங்கார். சொரூப விகார மில்லாமலிருந்துகொண்டே
 சிலவற்றை உண்டாக்குதலும், 
அங்ஙனம் உண்டாக்கினவற்றை
 உட்கொள்ளுதலும் அற்பச்சத்தியையுடைய சிலந்திப் பூச்சிக்கு இயல்பாகும்
 போது, சொரூபத்திற்கு விகாரமில்லாமலிருந்து கொண்டே அண்டங்களைப்
 படைத்தலும் 
விழுங்குதலுமாகிய இயல்பு சர்வ சத்திகளான இறைவனுக்குக்
 கூடுதல் அரிதன்று என்பதாம். ‘ஒரு சிலந்திக்கு 
உண்டான ஸ்வபாவம்
 சர்வசத்திக்குக் கூடாதொழியாதிறே,’ என்ற தத்துவத்திரயமும் ஈண்டுக்
 கருதுதல் 
தகும்.
 
 3. 
‘அமி’ என்னும் இதனை, பின் வருகின்ற ‘இவர்கள் வணங்கினால்
 மாசூணாதோ’ என்பதுடன் முடிக்க.
 
 4. 
தைத்திரீய, ஆனந். 6 : 91.
 |