|
த
தாம் இறைவனைச் சேர்தல்,
இருளுக்கும் ஒளிக்கும் உள்ள சேர்த்தியைப் போன்றது என்பார், தம்மைச் ‘சிறிய ஞானத்தன்’
என்றும், இறைவனை ‘அறிதல் ஆர்க்கும் அரியானை’ என்றும் அருளிச்செய்கிறார். கடி
சேர் தண் அம்துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னை-நாள் செல்ல வாசனை ஏறி வருகின்ற திருத்துழாய்
மாலை புனைந்தவனை. அறிய அரிய பொருளுக்கு அடையாளம் திருத்துழாய் மாலை. கண்ணனை-அறிய அரியனாயிருந்தும்
ஆயர்கட்கும் ஆய்ச்சிகட்கும் தன்னை எளியன் ஆக்கி வைத்தவனை.
செடி ஆர் ஆக்கை
அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை-1‘முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும்பொருட்டு
என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’ என்கிறபடியே, அவனையே உபாயமாகப் பற்றித் தூறு மண்டின
சரீரத்தை அறுத்துக் கொள்ளும் அடியார் உண்டு கேவலர்; அவர்களுக்கு அதனைத் தவிர்த்துக்
கொடுக்கும் திருமகள் கேள்வனை. ‘ஆயின், அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை
விளைக்குமவர்களே அடியார் ஆவர்; தம்மைப்போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப்
பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக்கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின்,
அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார். இனி, செடி ஆர் ஆக்கை என்பதற்கு, 2‘நோய்
எலாம் பெய்தது ஓர் ஆக்கை’ என்கிறபடியே, பாபம் மிக்கு இருக்கிற சரீரம் என்று கூறலுமாம்.
‘நன்று; உமக்கு இப்போது வந்தது என்?’ என்ன, அடியேன் காண்பான் அலற்றுவன்-‘அடியேன்’ என்று
அலற்றுவன், ‘காணவேண்டும்’ என்று அலற்றுவன். இதனின் மிக்க ஓர் அயர்வு உண்டே - உண்டியே
உடையே என உகந்து ஓடும் இம்மண்டலத்தாரோடு சேர்ந்து திரிந்த நாளில் அறிவே நன்றாக இருந்தது
அன்றே! ‘அது நன்றாயினவாறு என்?’ என்னில், அப்போது கடக்க நின்று பகவத் தத்துவத்தைக் குறி
அழியாமை வைத்தேன்; இப்போது அன்றோ நான் கிட்டி அழிக்கப் பார்த்தது! இதனைக்காட்டிலும் அறிவு
கேடு உண்டோ?
(7)
1.
ஸ்ரீ கீதை. 7 : 29.
2.
பெரிய திருமொழி, 9. 7 : 7.
|