|
கூறப
கூறப்படுகிறான் ஆதலின்,
‘யாக்கை நிலை எய்தி’ என்கிறார். ‘இது கூடுமோ?’ எனின், இட்சுவாகு குலத்தவருள் ஒருவன்
யாகம் செய்துகொண்டிருக்கும்போது தாகம் உண்டானவாறே மந்திரத்தால் பரிசுத்தம் செய்யப்பட்ட
தண்ணீரைக் குடிக்க, கருத்தரித்தது; இது ஆண் பெண் சேர்க்கையால் ஆயது அன்றே! சத்தி அதிசயத்தாலே
இப்படிக் கூடக்கண்ட பின்பு, ‘வரம்பில் ஆற்றலையுடைய இறைவனுக்குக் கூடாதது இல்லை,’ என்று
கொள்ளத் தட்டு இல்லை. மண்ணை அமுது செய்தது, அதன் சத்தைக்காக; வெண்ணெய் அமுது செய்தது, உன்
சத்தைக்காக.
மண்தான் சோர்ந்தது
உண்டேலும் மண் கரைய மனிசர்க்கு ஆகும் நெய் பீர் சிறிதும் அண்டா வண்ணம் ஊண் மருந்தோ-பூமியைத்
திருவயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது தங்கியிருந்தது ஏதேனும் மண் உண்டாகிலும், பிற்பட்ட மனிதர்கட்கு
மிகச் சிறிதும் மீதி இல்லாதபடி நெய் அமுது செய்தது அதற்கு மருந்தோ? அதாவது, ‘உண்ட மிச்சில்
சிறிதும் இல்லாதபடி முழுதும் அமுது செய்யிலோ மருந்தாவது?’ என்றபடி. இனி, இதனை, ‘மனிசர்க்கு
ஆகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் நெய் உண் மண் கரைய மருந்தோ’ என்று கொண்டு கூட்டி, ‘உண்ட
மண்ணிலே சிறிது வயிற்றிலே தங்கி இருந்தால் மனிதர்கட்கு வரக்கூடிய சோகை சிறிதும் வாராதபடி
நெய்யை உண்ணுதல் மருந்தோ? அன்றே?’ என்று பொருள் கூறலுமாம். ‘ஆயின், பின்னை எதற்காகச் செய்தோம்?’
என்னில், மாயோனே - ‘அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தாரகம் இல்லாதபடியான அடியார்களிடத்துள்ள
பெரு மோஹத்தாலே செய்தாய் இத்தனையன்றோ?’ என்பதாம்.
(8)
53
மாயோம் தீய அலவலைப்
பெருமா
வஞ்சப் பேய்வீயத்
தூய குழவி
யாய்விடப்பால்
அமுதா
அமுது செய்திட்ட
மாயன்
வானோர் தனித்தலைவன்
மலராள்
மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன்
தம்மான் என்அம்மான்
அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே.
|