|
1
1‘முனியே
நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச்செய்கிறார். 2அவன் தெளிந்து
வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.
(10)
55
மாலே ! மாயப்
பெருமானே!
மாமா
யவனே ! என்றுஎன்று
மாலே ஏறி
மால்அருளால்
மன்னு
குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர்
இசைகாரர்
பத்தர்
பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட
இவைபத்தும்
வல்லார்க்கு
இல்லை பரிவதே.
பொ-ரை : ‘மாலே, மாயப்பெருமானே, மா மாயவனே’ என்று
பலகால் கூறி, தாம் தாழ்ந்தவர் என்று அகலும்படி பிச்சு ஏறி, பின் இறைவனுடைய திருவருளால்
பொருந்தி நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த, பால் போன்று இனிய
இயற்றமிழ் வாணரும் இசைத்தமிழ்வாணரும் பத்தர்களும் துதிக்கின்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள்
சிறந்து பொலிகிற இப்பத்துத்திருப்பாசுரங்களையும் கற்று அறிய வல்லவர்கட்கு, ‘நான் தாழ்ந்தவன்’
என்று நினைந்து அகலும் துன்பம் இல்லை என்கிறார்.
வி-கு :
‘ஏறி, மால் அருளால் மன்னு சடகோபன்’ என முடிக்க.
‘பாலேய்’ ஏய்-உவம உருபு. இசைகாரர் எனப் பின் வருதலால் ‘தமிழர்’ என்றது இயற்றமிழ் அறிஞரை
உணர்த்திற்று.
1.
‘ஆயின், ஐந்தாந் திருவாய்மொழியின் முடிவிலேயே இவரை
அங்கீகரிப்பதாகத் திருவுள்ளம்பற்றி,
இறைவன் வீடு திருத்துவானாயின்,
இப்பிரபந்தத்தையும் முற்றுப்பெறச்செய்து உலகத்தைத்திருத்திய
வழியாலே
உலகத்திற்குப் பெரியதோர் உபகாரத்தைச் செய்தனன் ஆயினமை யாங்ஙனம்?’
எனின்,
‘மனந்திருத்தி வீடு திருத்தப்போய் நாடு திருந்திய வாறே வந்து’
என்கிறபடியே, இறைவன் இவர்பக்கல்
கொண்ட அவாவின் மிகுதியால் வீடு
திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப்
பொறாராய் ‘முனியே
நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய இறைவன்
தமக்குச் செய்த
உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு
எல்லாம் பெரியதோர் உபகாரமாய்
முடிந்தது.
2.
‘ஆயின், இவர் முற்றறிவினர் ஆதலின், இறைவன், இவர்பக்கல் கொண்ட
அவாவின் மிகுதியால் வீடு
திருத்தப்போயினமையை அறிவார் அன்றே?
அங்ஙனம் இருக்க, இவர் கூப்பிட்டது எற்றிற்கு?’ எனின்,
இறைவன் கொண்ட
வேணவா நீங்கித் தெளிந்து வந்து கொண்டு போகப்பற்றாமல் கூப்பிடுகின்றார்.
|