|
என
என்னில், இறைவனுடைய
ஒவ்வொரு குணத்தைத் தனித்தனியே அநுபவித்தால் அநுபவித்த குணங்களில் உண்டான மிக்க விருப்பம்,
1‘எவன் ஒருவன் இறைவனிடத்தில் மிக்க பக்தியினையுடையவனாக இருக்கின்றானோ அவன்
மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை உடையவனாக இருக்கின்றான்,’ என்றும், 2‘மாற்பால்
மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு’ என்றும் சொல்லுகிறபடியே, சிற்றின்ப விஷயங்களில் வைராக்கியத்தைப்
பிறப்பித்து, இறைவனுடைய மற்றைக் குணங்களிலே ஆசையையும் பிறப்பிக்கும்; பின்னர், அக்குணங்களில்
முறையாக அநுபவிப்போம் என்ற எண்ணம் பொருந்தாது; யாதொரு போது ஆசை மிக்கது, அப்போதே ஆசைப்பட்ட
பொருள் கிடையாமையாலும், பகவானுடைய அநுபவத்திற்கு விரோதியான சரீரசம்பந்தத்தின் நினைவு முதலியவைகளாலும்
பகவானிடத்தில் அநுபவித்த பகுதியையும் இழந்து, 3‘எந்நாள் யான் உன்னை இனி வந்து
கூடுவேன்?’ என்றும் 4‘பல நீ காட்டிப் படுப்பாயோ?’ என்றும், 5‘போர
வைத்தாய் புறமே’ என்றும். 6‘கூவிக் கொள்ளுங் காலம் இன்னங்குறுகாதோ’ என்றும்
கூப்பிடா நிற்பர். அவனை அநுபவிக்கப் புக்கால், 7‘அடியேன் அடைந்தேன் முதன்முன்னமே’
என்றும், 8‘பருகிக் களித்தேனே’ என்றும், 9‘உண்டு களித்தேற்கு உம்பர்
என் குறை’ என்றும், 10‘தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்’
என்றும், 11‘எமர் கீழ் மேல் ஏழ் எழு பிறப்பும், மா சதிர் இது பெற்று நம்முடை
வாழ்வு வாய்க்கின்றவா’ என்றும் தாமும் தம்முடைய சம்பந்தி சம்பந்திகளுமாகக் கூடக்களிப்பர்.
இப்படிப் பல குணங்களையுடையனான எம்பெருமான் பக்கலிலே எல்லையற்ற பக்தியையுடையராய், அவனுடைய
சேர்க்கை பிரிவு இவற்றில் ஒத்த இன்ப
1.
பார்ஹஸ்பத்ய ஸ்மிருதி.
2. மூன்றாந்திருவந், 14.
3. திருவாய்மொழி, 3. 2: 1.
4. திருவாய்மொழி, 6.
9: 9.
5. திருவாய்மொழி, 5. 1: 5.
6.
திருவாய்மொழி,
6. 9: 9.
7. திருவாய்மொழி, 2. 3: 6.
8. திருவாய்மொழி, 2. 3: 9.
9. திருவாய்மொழி, 10. 8: 7.
10.
திருவாய்மொழி, 5. 2: 2.
11. திருவாய்மொழி, 2. 7: 1.
|