|
வச
வசிப்பது போன்று,
விரோதியாய் உள்ள அறிவுத்தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள
அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாகவுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’
எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின்,
கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில்
திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற்கொண்ட சரீரங்கள்,
அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.
‘நன்று; சம்சாரிகளுக்கு
அன்றோ ருசி பேதமும் செவ்வைக் கேடும் உளவாம்? நித்தியசூரிகளுக்கு 1விஷயம் ஒன்று
ஆகையால் ருசி பேதமும் இல்லை, செவ்வைக்கேடும் இல்லையே? அவர்களுடன் செவ்வையனாய்ப் பரிமாறுகையாவது
என்?’ எனின், எல்லார்க்கும் விஷயம் ஒன்றேயாகிலும், அவ்விஷயந்தன்னில் 2விருத்தி
பேதத்தால் ருசி பேதம் உண்டாம். நீடு நின்று-கர்மத்தால் வந்தனவாயின் அழிவுறும்; சொரூபத்திற்குத்
தக்கனவான பரிமாற்றங்கள் இவைதாம்; ஆகையாலே, நித்தியமாயிருக்குமாதலின் ‘நீடு நின்று’
என்கிறார். இறைவன் இவர்களை ஒழியச் செல்லான்; இவர்கள் அவனை ஒழியச் செல்லார்கள் ஆதலின்,
‘நின்று’ என்கிறார். அவை-‘புள்’ என்றும், ‘துழாய்’ என்றும் சொல்லுகையாலே ‘அவை’
என்ற அஃறிணைச்சொல்லால் அருளிச்செய்கிறார். ஆடும் - சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது,
விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது, ‘அவை
ஆடும்’ என்கிறார். அம்மானே-‘நித்தியசூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும்
அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்.
(1)
79
அம்மானாய்ப்
பின்னும், எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய்
கீண்ட, செம்மா கண்ணனே.
பொ-ரை : கொடிய குதிரையினது வாயினைப் பிளந்த, சிவந்த,
பெருமை பொருந்திய கண்களையுடைய கண்ணபிரான் அறப் பெரிய
1.
இறைவன் ஒருவனேயாதலின், ‘விஷயம் ஒன்று’ என்கிறார்.
2.
விருத்தி-ஈண்டுக் கைங்கரியம்; அவர் அவர்கள் செய்கின்ற வெவ்வேறு
வகைப்பட்ட கைங்கரியங்களால்
ருசிபேதம் உண்டு என்பது கருத்து.
|