|
வன
வனாய் இருந்தும், அதற்குமேல்
எல்லா அவதாரங்களையும் உடையவன் ஆனான்.
வி-கு :
மாண்பு - அழகு. அஃது ஈண்டு அவதாரங்களுக்கு ஆயிற்று.
‘கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல், எரிசினங் கொன்றோய்’ (பரி. 3) ‘மேவார் விடுத்தந்த
கூந்தற் குதிரையை, வாய் பகுத்திட்டு’ (கலித். 103) என்பன ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.
ஈடு :
இரண்டாம் பாட்டு. இப்பாட்டு, நித்திய விபூதியில்
நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன் செவ்வையனாய்ப் பரிமாறும்படி
சொல்லுகிறது.
அம்மானாய் - இப்படி
எல்லாரினும் அறப்பெரியவனாய் இருந்தும், வெம் மா வாய் கீண்ட - வெவ்விதான கேசியினுடைய வாயைக்
கிழித்துப் போகட்ட. கேசி, வாயை அங்காந்துகொண்டு வந்து தோற்றின போது கண்ட ஸ்ரீ நாரதபகவான்,
‘உலகமே அழியப் போகின்றது!’ என்று கூவிக்கொண்டு வந்து விழுந்தான் அன்றே? அந்நாரதபகவானுக்கு
அக்காலத்திற்பிறந்த பயம், அவ்வசுரன் இறந்து போகவும் நினைத்த காலத்திலேயே அஞ்சுகிறார்
இவர்; ஆதலின், ‘வெம்மா’ என்கிறார். செம் மா கண்ணன். விரோதி போகையால்வந்தபிரீ
தியாலே சிவந்து மலர்ந்த திருக்கண்களையுடைய கிருஷ்ணன் பின்னும் எம் மாண்பும் ஆனான் - அவ்வவதாரத்தோடு
முடிவு பெறுதல் இன்றிப் 1‘பல படியாகப் பிறக்கிறேன்’ என்கிறபடியே, அதற்குமேல் பல
அவதாரங்களை எடுத்தான். பரத்துவத்திலும் 2மனித உருவத்தால் வந்த பரத்துவத்தினது
அழகை, ஈண்டு ‘மாண்பு’ என்கிறார்.
(2)
80
கண்ணாவான் என்றும்,
மண்ணோர்விண் ணோர்க்குத்
தண்ணார் வேங்கட,
விண்ணோர் வெற்பனே.
பொ-ரை : நித்தியசூரிகள் தங்கியிருக்கின்ற
குளிர்ச்சி பொருந்திய திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன், எக்காலத்தும் மண்ணோர்க்கும்
விண்ணோர்க்கும் கண் ஆவான்.
வி-கு :
கண் - பற்றுக்கோடு. வெற்பன் - வெற்பையுடையவன் வெற்பன்;
வெற்பு - மலை.
1.
ஸ்ரீ கீதை, 3 : 5.
2. அதிமானுஷ செயல்கள் முதலியவைகளால் வந்த பரத்துவம், சௌலப்யம்
முதலிய குணங்களோடே கூடியிருக்கையாலே,
பரத்துவத்திலும் இது
விஞ்சியிருக்குமாதலின், ‘பரத்துவத்திலும் மனித உருவத்தால் வந்த
பரத்துவத்தினது
அழகு’ என்கிறார்.
|