முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
313

New Page 1

‘இச்சரீரம் இறைவனுக்கு விரும்பத்தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார். இதனால், அவன் மேல்விழ மேல்விழத் தாம் பின் வாங்குகின்றமை தோன்றுகிறது.

(5)

83

        கலந்துஎன் ஆவி, நலம்கொள் நாதன்
        புலன்கொள் மாணாய், நிலம்கொண் டானே.


    பொ-ரை :
என் உடலில் கலந்து உயிரினது நலத்தைக்கொண்ட இறைவன், இந்திரியங்களைக் கொள்ளை கொள்ளுகின்ற குறுகிய பிரமசாரியாகி, மகாபலியிடம் மூவடி மண்ணை வாங்கினான்.

    வி-கு : ‘கலந்து கொள் நாதன்’ என முடிக்க. கொள் நாதன், வினைத்தொகை. ‘கொள் மாணாய்’ என்பதும் அது. ‘மாணாய்க் கொண்டான்’ என முடிக்க.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘இப்படிக் கலந்து செய்தது என்?’ என்ன, சரீரத்து அளவிலே விரும்பி விட்டிலன்; என் ஆவி நலத்தையும் கொண்டான்,’ என்கிறார்.

    கலந்து என் ஆவி நலம் கொள் நாதன்-என்னோடே ஒரு நீராகக் கலந்து, பின்னர் என் ஆத்துமாவினுடைய இனிமையைக் கொண்டான். நாதன்-அவ்வளவேயோ? 2‘என்னை ஆளும் கொண்டு’ என்கிறபடியே, நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான். ‘இப்படி அகப்பட்டார் நீரேயோ?’ என்ன, மகாபலியும் அகப்பட்டான். ஆயின், அவன் ஆவி நலம் கொடுத்திலன்; 3கழஞ்சு மண் கொடுத்தான் இத்தனை. புலன்கொள் மாணாய் நிலம் கொண்டான் - இந்திரியங்கள் அனைத்தையும் கொள்ளை கொள்ளும் வடிவத்தை மேற்கொண்டு, அவன் ‘என்னது’ என்று அபிமானித்து இருக்கிற பூமியைக் கவர்ந்துகொண்டான்.

(6)

84

        கொண்டான் ஏழ்விடை, உண்டான் ஏழ்வையம்
        தண்தாமம் செய் துஎன், எண்தான் ஆனானே.

 

1. ‘என் ஆவி நலம் கொள் நாதன்’ என்ற பதங்களைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘என்நலனும் என்நிறைவும் என்சிந் தையும்
  என்வளையுங் கொண்டுஎன்னை யாளும் கொண்டு
  பொன்அலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே
  புனல்அரங்கம் ஊர்என்று போயினாரே!’

(திருநெடுந். 25)

3. கழஞ்சு - நிறையளவுப்பெயர்.