|
New Page 1
சேறல்வேண்டும்’ என்றும்,
‘அங்கே அனுபவிக்க வேண்டும்’ என்றும் நான் ஆசைப்பட, ‘திருநகரிக்குப் போகவேண்டும்; ஆழ்வாரை
அனுபவிக்க வேண்டும்,’ என்று அவன் பாரிக்கிறான்’ என்றபடி.
(7)
85
ஆனான் ஆன்ஆயன்,
மீனோடு ஏனமும்
தான்ஆ
னான்என்னில், தானாய சங்கே.
பொ-ரை : இறைவன், என்னிடத்தில், தனக்கு உண்டான அன்பினால்,
பசுக்களுக்குத் தலைவனாய்ப் பிறந்தான்; அதற்கு மேல், மீனும் பன்றியுமாகவும் பிறந்தான்.
வி-கு :
‘ஆனாயன்’ என்பதனை, ‘ஆன் ஆயன்’, ‘ஆன் நாயன்’
எனப் பிரிக்க. நாயன்-தலைவன் சங்கம்-அன்பு; அளவுப்பெயருமாம்.
ஈடு :
எட்டாம் பாட்டு. 1‘என்னைக் கருதி அவன்
பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை,’ என்கிறார்.
ஆன் ஆயன் ஆனான்
- இடையனாய்ப் பிறந்து, பிறந்த 2மெய்ப்பாட்டாலே, முடி சூட இராதே, சாதிக்குத்
தக்கதான பசுக்களைக் காத்தலை மேற்கொண்டான். அவ்வளவிலேதான் விட்டானோ? மீனோடு ஏனமும் தான்
ஆனான் - எல்லாரினும் அறப்பெரியனான தான், இவற்றோடு ஒத்த சாதியன் ஆனான். இறைவன் ஒவ்வொரு
கால விசேடத்திலே முறைப்படி பிறந்திருந்தும், அனுசந்தானத்தின் பதற்றத்தாலே ஒரே காலத்தில்
எடுத்த இரண்டு அவதாரங்கள் போன்று, ‘மீனோடு ஏனம்’ என்று ஒருசேர அருளிச்செய்கிறார்.
வடிவும் செயலும் சொல்லும் அவ்வக்குலத்திற்கு அடுத்தவையாய் இருத்தலின், ‘ஆனான்; என்கிறார்.
3‘இவைதாம் வித்தியாவதாரங்கள். 4இவ்வவதாரங்களைப் பார்க்குமிடத்து,
மேற்கூறிய
1.
‘என்னில் தானாய சங்கே’ என்ற பதங்களை நோக்கி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2.
‘மெய்ப்பாட்டாலே, பசுக்களைக் காத்தலை மேற்கொண்டான்,’ எனக்கூட்டுக.
‘கன்று மேய்த்து
விளையாட வல்லானை, தடம்பருகு கார்முகிலை’ என்பதனை
ஈண்டு ஒப்பு நோக்குக.
3.
‘இவைதாம்’ என்றது, இப்பாசுரத்தில் குறித்த மூன்று அவதாரங்களையும்.
இவ்வவதாரங்கள் மூலமாகப்
‘பகவத்கீதை’ முதலான சாஸ்திரங்களை
வெளிப்படுத்தினான் ஆதலின், ‘வித்தியா அவதாரங்கள்’ என்கிறார்.
4. மச்சம், வராகம் இவ்வவதாரங்களின் தாழ்வினைப் பார்க்குமிடத்தில்,
கிருஷ்ணாவதாரம் செய்த
சாதி, மிக மிக உயர்ந்தது என்பது கருத்து.
|