| அவதர 
அவதரிப்பான். ‘ஆயின், எல்லா அவதாரங்களிலும் திவ்விய ஆயுதங்கள் உளவோ?’ எனின், எல்லா அவதாரங்களிலும் உண்டு; 
அரசர்கள் 1கறுப்பு உடுத்துப் புறப்பட்டால், விரும்புகிற காலத்தில் முகங்காட்டுகைக்காக 
அந்தரங்கர் மறைந்து திரிவர்; அது போன்று, தோற்றாதேயும் நிற்பர்கள். 2‘கூரார் 
ஆழி வெண்சங்கேந்தி வாராய்’ என்னும் இவர்களுக்கு அப்படியேயன்றே தோன்றுவது?’ வெறும்புறத்திலே 
ஆலத்தி வழிக்க வேண்டுங்கைகளில் திவ்விய ஆயுதங்களைத் தரித்தான்,’ என்பார், ‘அம் கையில் 
கொண்டான்’ என்கிறார். எங்கும் தானாய - தேவர் மனிதர் முதலான வேறுபட்ட சாதிகள்தோறும் 
தான் வந்து தோன்றினவன். இனி, இதற்கு, ‘ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப்போன்று 
தம்மை ஏற்றுக்கொள்ளுகைக்காக நிறைந்தபடியைச் சொல்லுகிறார்’ என்று கோடலுமாம். நங்கள் நாதனே 
- நம்மை அடிமை கொள்ளுகையே பிரயோஜனமாகவுடைய தலைவன். 
(9) 
87 
        நாதன் ஞாலம்கொள், 
பாதன் என்அம்மான்ஓதம் 
போல்கிளர், வேத நீரனே.
 
 பொ-ரை : எல்லார்க்குந் தலைவன், பூமியை அளந்துகொண்ட 
திருவடிகளையுடையவன், எனக்குத் தலைவன், சமுத்திரம் போன்று கிளர்கின்ற வேதங்களால் பேசப்படும்
3ஆர்ஜவ குணத்தையுடையவன்.
 
 வி-கு : 
கிளர்தல் - மேன்மேல் வளர்தல். கிளர்வேதம் - 
வினைத்தொகை.
 
 ஈடு : 
பத்தாம் பாட்டு. ‘அவன் நீர்மையைப் பேசப் 
புக்கால் நம்மால் பேசப்போமோ! கடல் கிளர்ந்தாற்போலே வேதமே பேச வேண்டாவோ?’ என்கிறார்.
 
 நாதன் - எல்லாரையும் 
நியமிக்கின்றவன். ஞாலம் கொள் பாதன் - வசிஷ்டன் சண்டாளன் என்னும் வேற்றுமை அற எல்லார் 
தலைகளிலும் திருவடிகளைப் பரப்பினவன். என் அம்மான் - 4இம் மேன்மையையும் நீர்மையையும் 
காட்டி என்னைத் தனக்கே உரிமை
 
1. கறுப்புடுத்துப் புறப்படல் - நகரி சோதனைக்காக மாறுவேடங்கொண்டுபுறப்படல்.
 
 2. திருவாய். 
6. 9 : 1.
 
 3. ஆர்ஜவம் - நேர்மை.
 
 4. 
‘இம்மேன்மையையும் நீர்மையையுங் காட்டி’ என்றது, ‘நாதன்’ என்ற
 பதத்தாற்கூறிய மேன்மையையும், 
‘ஞாலங்கொள் பாதன்’ என்ற
 தொடர்மொழியாற்கூறிய எளிமையையும் காட்டி என்றபடி.
 |