|
New Page 1
தோள் இணை மேலும்
- ‘அன்பினால் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்கிறபடியே, அணைக்க விரும்புகிற திருத்தோள்களிலும்,
நன்மார்பின்மேலும் - அணைப்பிக்குமவள் இருக்கிற திருமார்பிலும். சுடர் முடி மேலும் - அணைத்துக்கொண்டு
நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும்.
தாள் இணைமேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான் தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும்
சாத்தின திருத்துழாயினையுடைய சர்வேஸ்வரன். இனி, இவ்வடிகட்குப் பட்டர் மிக அழகாகவும்
ரசோக்தியாகவும் விசேடப்பொருள் அருளிச்செய்வர்; அப்பொருள் வருமாறு: வீரராய் இருப்பார்
முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான். காதலர்களாய் இருப்பவர்கள்
அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்; அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் 2கோயில்
கட்டணத்துக்குக் கொடுத்தான்; ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத்
தாம் தாம் அணிந்துகொள்ளுவார்கள் இத்தனையன்றோ? ஆதலின், தான் சூடினான்; சேஷம் பின்னர்
அடியார் அன்றோ கைக்கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்; ஆபத்துக்குத் துணை செய்வார்
அடியார் அன்றோ? தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார்
அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’
எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும்
திருவடிகளே துணையாயினபடி.
கேள் இணை ஒன்றும்
இலாதான் - கேள் என்ற இதனைக் ‘கேழ்’ என்றாக்கி, அதாவது, ஒப்பாய், இணை என்றும் ஒப்பாய்,
திரளவும் தனித்தனியும் ஒப்பு இல்லாதவன் என்றபடி. இனி, ‘கேள்’ என்று உறவாய், சேர்ந்த ஒப்பு
இல்லாதவன் என்று கோடலும் ஆம். கிளரும் சுடர் ஒளி மூர்த்தி-ஆற்றுப் பெருக்குப் போன்று மேன்மேல்
எனக் கிளராநிற்பதாய் எல்லை அற்ற ஒளி உருவமான திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்.
‘சுடர், ஒளி’ என்பன ஒரு பொருட்
1.
ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 18 : 2.
2.
கோயில் கட்டணம் - அந்தப்புரம்.
|