| கள 
களாலே என் குற்றம் எல்லாம் 
கழிந்து நான் காண வல்லேனாம்படி குளிர நோக்குகின்றான். ‘ஆயினும், காண்கைக்குத் தடைகளாக இந்திரியங்கள் 
என்பன சில உளவே? அவை செய்வன என்?’ என்ன, ஐம்புலனும் அவன் மூர்த்தி - காட்சிக்குத் தடைகளான 
ஐம்பொறிகளும் அவன் இட்ட வழக்காம்படி அவனுக்குச் சரீரத்தைப் போன்று உரிமைப்பட்டு அங்கேயே
1படை அற்றன, கமலத்து அயன் நம்பிதன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி அமலம் தெய்வத்தோடு 
உலகம் ஆக்கி-திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்து, எல்லாரிலும் வேறுபட்ட பிறவியையுடையவனாய், 
தனக்கு இப்பால் உள்ளவற்றைப் படைக்குமிடத்தில் சர்வேஸ்வரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி 
ஞானம் நிறைந்த நான்முகனை நெற்றிக்கண்ணனான சிவபெருமானோடு உண்டாக்கி, அவ்வளவில் முடிவு பெறாமல், 
சத்துவகுணம் மிக்குள்ள தேவர்களோடே உலகங்களை உண்டாக்கினவன். ‘நெய்யுண்ணி’ என்னுமாறு போன்று
‘ஆக்கி’ என்றது, ‘ஆக்குந் தன்மையன்’ என்றபடி. என் நெற்றியுளான் - 2கர்மங்களுக்குத் 
தகுதியாக உலகத்தை உண்டாக்கிவிட்டான். 3‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் 
என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார், ‘நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து 
ஓதுகின்றார். 
(9) 
98 
        நெற்றியுள் 
நின்றுஎனை ஆளும்நிரைமலர்ப் 
பாதங்கள் சூடிக்
 கற்றைத் 
துழாய்முடிக் கோலக்
 கண்ண 
பிரானைத் தொழுவார்
 ஒற்றைப் 
பிறைஅணிந் தானும்
 நான்முக 
னும்மிந் திரனும்
 மற்றை 
அமரரும் எல்லாம்
 வந்துஎனது 
உச்சியு ளானே.
 
 பொ-ரை : ஒரு கலையுடன் கூடின பிறைச்சந்திரனை அணிந்திருக்கின்ற 
சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் மற்றும் இருக்கின்ற
 
1. படை அறுதல் - அடிமைப்படுதல்.
 2. மேலே வியஷ்டி சிருஷ்டி அருளிச்செய்கையாலே இங்குக் ‘கர்மங்களுக்குத்
 தகுதியாக உலகத்தை உண்டாக்கிவிட்டான்’ 
என்கிறார்.
 
 3. அவ்வருகு போக்கு இல்லாமையாலே பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல்’
 என்கிறார்.
 |