|
க
களை யுடையவர்களையும்,
தூய்மை அற்றவர்களையும், மனிதர்களுள் தாழ்ந்தவர்களையும் நான் சம்சாரத்தில் தள்ளுகிறேன்,’
என்னுமவன் இப்படிக் குளிர நோக்குகைக்குக் காரணம் என்?’ என்று பார்த்தார்; குளிர் நோக்கும்படி
செய்கின்றவர் அருகே இருக்கக் கண்டார்; கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை - கொம்பு
போலவும் பாம்புபோலவும் இருப்பதாய், அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையையுடைய பெரிய
பிராட்டியாரைத் திருமார்பிலேயுடையவனை என்கிறார். அரவு என்பது அராவு என வந்தது, நீட்டல்
விகாரம்; 1‘நச்சராவணை’ என்பது போன்று, இனி, கொம்பராவு இடை என்பதற்குக்
‘கொம்பை லகூகரியாநின்றுள்ள என்று பொருள் கூறலுமாம். எம்பிரானை - அச்சேர்த்திக்கு
ஒருகால் ‘எம்பிரானை’ என்கிறார். தொழாய் - தொழப்படும் பொருள் - ஒரு மிதுனமாய்
ஆயிற்று இருப்பது. மடநெஞ்சமே - ‘தொழுதுஎழு’ என்னலாம்படி பாங்கான நெஞ்சு ஆதலின் ‘மட நெஞ்சமே’
என்கிறார். மடம் - பவ்யம்; உரிமை.
(3)
103
நெஞ்ச மே! நல்லை
நல்லைஉன் னைப்பெற்றால்
என்செய் யோம்இனி
என்ன குறைவினம்
மைந்த னைமல
ராள்மண வாளனைத்
துஞ்சும்
போதும்வி டாது தொடர்கண்டாய்.
பொ-ரை :
மனமே, நல்ல தன்மையையுடையை, நல்ல தன்மையையுடையை!
உன்னைத் துணையாகப் பெற்றால் எந்தக் காரியத்தைத்தான் செய்யமாட்டோம்? இனிமேல் என்ன குறைவினையுடையோம்;
எப்பொழுதும் மாறாத இளமைப்பருவத்தையுடையவனை திருமகள் கணவனை நான் பிரிகின்ற காலத்தும் நீ
விடாது அவனைத் தொடர்வாயாக.
வி-கு :
இத்திருப்பாசுரம் இன எதுகையாய் அமைந்தது. நல்லை நல்லை
- அடுக்குத்தொடர் ; மகிழ்வின்கண் வந்தது. ‘குறை என்பது முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும்
பொருள்,’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். ‘குறை - இன்றியமையாப்பொருள்; அது, ‘பயக்குறை
1. திருச்சந்த விருத்தம். 85. ‘அரவுயர்கொடி, முழவுயர்தோள்’ என இவை,
குறியதனிறுதிச் சினை கெட்டு,
வருமொழி உயிர்முதன் மொழியாய் வருதலின்
வகர உடம்படுமெய் பெற்று உகரம் பெறாது முடிந்தன’ என்று
‘குறியதனிறுதி’
(தொல். ஏ. 234.) என்ற சூத்திரத்தின் உரையில் நச்சினார்க்கினியர்
எழுதுவதால் அவர் ‘அரா’ என ஆகார ஈறாகக் கொண்டனர் என்பது
விளங்கும்.
|