|
ய
யில்லைத் தாம் வாழுநாளே’
என்பதனாலும் அறிக,’ என்பர் பரிமேலழகர் (குறள், 612). துஞ்சுதல் - பிரிதல்.
ஈடு :
நான்காம் பாட்டு. 1தாம் கூறிய போதே
மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி, ‘என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ’ விடாதே கொள் என்கிறார்.
நெஞ்சமே நல்லை
நல்லை - சொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக்கொண்டாடும்
தாய் தந்தையர்களைப் போன்று, இவரும் நெஞ்சை 2மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார்.
3‘என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர், இன்னம் சொல்லீரோ?’
என்கிறபடியே, இவர்தாம் இறைவன் பக்கல் தூது விடுமாறு போன்று, நெஞ்சாகிய தனக்கும் தூது
விடும்படி இவர்தம்மை விட்டு இறைவன் பக்கலிலே நிற்க வல்ல நெஞ்சு ஆகையாலே ‘நல்லை நல்லை’
என அடுக்குத் தொடரால் கூறுகின்றார், கேட்ட நெஞ்சு, ‘என்னை இப்படிக் கொண்டாடுதல் என்?’ என்ன,
‘உன்னைப் பெற்றால் என் செய்யோம்? நீ என்னோடு ஒரு மிடறான பின்பு, நமக்குச் செய்ய முடியாதது
உண்டோ?’ என்றபடி. ‘ஆயின், பலம் கைப்புகுந்ததோ?’ எனின், ‘பலன் தருகைக்கு இறைவன் உளன்;
விலக்காமைக்கு நீ உண்டு;
1.
‘நெஞ்சமே, நல்லை நல்லை’ என்றதனை நோக்கி, ‘நெஞ்சைக் கொண்டாடி’
என்கிறார்.
‘துஞ்சும்போதும் விடாது தொடர்’ என்றதனை நோக்கி, ‘நான்
பிரிகிற காலத்திலும் விடாதே
கொள்’ என்கிறார்.
2. நெஞ்சு இருப்பது மார்பிலேயாகையாலே ‘மார்விலேயணைத்து’ என்கிறார்.
3. திருவிருத்தம், 30. இவ்விடத்து.
‘ஆரி ருக்கிலுமென் நெஞ்ச
மல்லதொரு வஞ்ச மற்றதுணை இல்லையென்று
ஆத ரத்திவனொடு தூது
விட்டபிழை யாரி டத்துரைசெய் தாறுவேன்?
சீரி ருக்குமறை முடிவு தேடரிய
திருவ ரங்கரைவ ணங்கியே
திருத்து ழாய்தரில்வி
ரும்பி யேகொடு திரும்பி யேவருதல் இன்றியே
வாரி ருக்குமுலை மலர்ம டந்தையுறை
மார்பி லேபெரிய தோளிலே
மயங்கி யின்புற முயங்கி
என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே’
என்ற திவ்விய கவியின்
திருதாக்கு ஒப்பு நோக்கல் தகும், (திருவரங்கக்
கலம்பகம், 24)
|