|
கண
கண்டுகொண்டனை நீயும் -
விலக்குகைக்குப் பரிகாரமுடைய நீயும் அன்றோ கண்டுகொண்டாய்? பிரளயத்தில் அகப்பட்ட உலகத்திற்குத்
தடுப்பதற்கு வழி இல்லை; உலகத்தை அளக்கிற காலத்தில் அறிந்து தடுப்பதற்கு அங்குச் சமயம் இல்லை;
அறிந்தால் விலக்கி இருப்பார்கள் அன்றே? 1அசங்கிதமாக வருகையாலே பேசாதிருந்தார்கள்
இத்தனை, அவ்வாறு அன்றி விலக்குதற்கு எல்லா வழிகளையும் பெற்றிருந்த நீ விலக்காதிருந்தமையே
அருமை’ என்பார், ‘நீயும்’ என உம்மை கொடுத்து ஓதுகின்றார்.
(5)
105
நீயும் நானும்இந்
நேர்நிற்கில் மேல்மற்றோர்
நோயும்
சார்கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையு
மாய்இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன்
எந்தையே.
பொ-ரை : தாய்தந்தையர்களைப் போன்று பரிவுள்ளவனாய்
இவ்வுலகத்தில் வந்து அவதரிக்கின்றவனாய் நீலமணி போன்ற நிறத்தையுடையவனாய் உள்ள என் தமப்பன்,
வணங்கு என்று கூறுதற்குத் தகுதியாகவுள்ள நீயும் வணங்கச்சொல்லுகிற நானும் ஓர் எண்தானும் இன்றி
நிற்றலாகிய இம்முறையில் நின்றால,் மேல் வருகின்ற காலத்தில் ஒரு வித நோயினையும் நம்மைச்
சாரச் செய்யான்; நெஞ்சமே, சொன்னேன்.
வி-கு :
‘நாம் இந்நேர் நிற்குல் எந்தைமேல் ஓர் நோயும்
சார் கொடான்,’ எனக் கூட்டி முடிக்க.
ஈடு :
ஆறாம் பாட்டு. 2‘இப்படிச் சுலபன் ஆனவன்
நம்மை விடான் அன்றே?’ என்ன, ‘நம் தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும்
விடான்’ என்று திருவுள்ளத்துக்கு அருளிச்செய்கிறார்.
நீயும் நானும் -
அந்தப் புள்ளின்பின் போன நீயும், உன்னைத் துணையாகவுடைய நானும். இந்நேர் நிற்கில் - பலத்தை
அனுபவம் பண்ண இருக்கிற நாம் இப்படி விலக்காதே இருக்கில். இனி, இதற்கு 3‘நான்
ஒருவர்க்கும் உரியவன் அல்லேன்’ என்னும் மாறுபட்ட எண்ணம் இன்றிக்கே ஒழியில் என்று
கூறலுமாம். மேல்
1. அசங்கிதம் - ஐயமில்லாத தன்மை; எதிர்பாராத வகையில் என்றவாறு.
2.
‘இந்நேர் நிற்கில் மற்றோர் நோயுஞ் சார்கொடான்’ என்றதற்குத் தக
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3.
ஸ்ரீ ராமா. யுப். 36 : 11.
|