|
New Page 1
நெஞ்சிலே வைத்தேன்.
சொல்லுவன்-நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்துத் தூஷித்த அளவேயோ? பிறர் அறியும்படி வைத்தேன்.
பாவியேன் - 1விலக்ஷண போக்கியமான இப்பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே!
சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து,
சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார். ‘ஆயின், பகவானை
நினைக்கையும் சொல்லுகையும் பாவத்தின் பயனோ?’ என்னில், 2புரோடாசத்தை நாய்
தீண்டினாற்போன்று நித்தியசூரிகள் அநுபவிக்கும் பொருளை அழிக்கை பாவத்தின் பலம் அன்றோ?
எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை-நினையாவிடில் அரைக்கணம்
தரிக்கமாட்டாத நித்தியசூரிகள் நினைத்து அநுபவித்து அவ்வநுபவம் வழிந்து ‘எங்களுக்குப் பரிவன்
ஆனவனே! சுவாமியானவனே!’ என்று தங்கள் நெஞ்சிலே வைத்துச் சொல்லும்படியான செல்வத்தையுடையவனை
நானும் சொன்னேன்; ஆதலால், இப்பொருளை ஒருவர் நம்பாதபடி அழித்தேன்,’ என்கிறார்.
(7)
107
செல்வ நாரணன்
என்றசொல் கேட்டலும்
மல்கும் கண்பனி
நாடுவன் மாயமே
அல்லும் நன்பக
லும்இடை வீடுஇன்றி
நல்கி என்னைவி
டான்நம்பி நம்பியே.
பொ-ரை : திருநாராயணன் என்னும் பெயரை வழியே செல்வான்
ஒருவன் கூறக் கேட்ட அளவில் கண்கள் நீர் பெருகாநிற்கும்; யானும், ‘எங்குற்றாய் எம்பெருமான்!’
என்று தேடாநின்றேன். இது என்ன ஆச்சரியம்! எல்லாக் குணங்களும் நிறைந்த இறைவன், சிறந்த இராக்
காலமும் சிறந்த பகற்காலமும் ஒழிவின்றி என்னைப் பெரியவனாக நினைத்து விரும்பி என்னை விட்டு
நீங்காதவன் ஆகின்றான்.
வி-கு :
திருவே செல்வமாதலின், திருநாரணனைச் ‘செல்வ நாரணன்’
என்கிறார். நாடுவன் என்ற முற்றிற்கு ‘யான்’ என்னும்
1.
விலக்ஷண போக்யமான-வேறுபட்ட சிறப்பினையுடைய
சுகானுபவத்திற்குரியதான.
2.
புரோடாசம்-வேள்வித்தீயில் இடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள்.
|