|
76
குணங்களால் நிறைந்த
இறைவன், என்னைத் தன்னுடையவனாக நினைத்து, என்னை நீங்குதற்கு மனம் இல்லாதவன் ஆகின்றான். மேல்
1‘வெந்நாள்’ என்பவர், ஈண்டு ‘அல்லும் நன்பகலும்’ என்கிறார்; தம்முடைய ஆசை எல்லாம்
ஒழிய, தம்முடைய உறுப்புகளுக்குப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இறைவன் மேல் விழுகிற காலம்
ஆதலின். தாம் ஒருகால் தேடி விடாநிற்க, இறைவன் இடைவிடாதே விரும்புகிறான் ஆதலின்,
‘இடைவீடின்றி’ என்கிறார். இனி, ‘என்னை விடான் நம்பி நம்பியே’ என்பதற்கு, ‘என்னை -
அபூர்ணனான என்னை, நம்பி - பெருமதிப்பனாக நினைத்து, விடான் - விடுகின்றிலன்’ என்று பொருள்
கூறலுமாம். ‘சம்சாரி சேதனனைப்பெற்று, பெறாப்பேறு பெற்றானாய் இருக்கிற இவனையே உலகத்தார்
பரிபூர்ணன் என்கிறார்கள்,’ என்பார் ‘நம்பியே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகிறார்.
‘நம்பி, அல்லும்
நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி, நம்பி என்னைவிடான்; மாயமே!’ எனக் கூட்டுக.
(8)
108
நம்பி யைத்தென்
குறுங்குடி நின்றஅச்
செம்பொ னேதிக
ழும்திரு மூர்த்தியை
உம்பர் வானவர்
ஆதிஅம் சோதியை
எம்பி ரானைஎன்
சொல்லிம றப்பனோ.
பொ-ரை : அழகிய திருக்குறுங்குடி என்னும் திவ்விய தேசத்தில்
எழுந்தருளியிருக்கின்ற நம்பியை, அந்தச் செம்பொன் போன்று விளங்குகிற அழகிய திருமேனியையுடையவனை,
பரமபதத்தில் எழுந்தருளியிருக்கின்ற நித்தியசூரிகளுடைய தொழில்கட்கெல்லாம் காரணனான பரஞ்சோதியை,
எனக்கு உதவியைச் செய்தவனை நான் என்ன காரணத்தைக் கூறி மறப்பேன்?
வி-கு :
‘‘நம்பி’ என்பது, ‘நமக்கு இன்னார்’ என்னும்
பொருள்பட வருகின்ற சொல்’ என்பர் சேனாவரையர். (தொ. சொ. 163.) மூர்த்தி - வடிவத்தையுடையவன்.
உம்பர் - மேலிடம். ‘மறப்பனோ’ என்பதில் உள்ள ஓகாரம் எதிர்மறை.
ஈடு :
ஒன்பதாம் பாட்டு 2‘நீர்தாம் இங்ஙனே
கிடந்து வருந்திஉழலாமல், இறைவனை மறந்து சம்சாரிகளைப்போன்று உண்டு
1. திருவாய்மொழி, 3. 2 : 1.
2.
‘என் சொல்லி மறப்பன்?’ என்ற பதங்களை நோக்கி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|