|
மனத
மனத்தைப் பற்றியேயாம்;
ஆக, ஞானம் செல்லுதற்கு வழியாக இருக்கின்ற மனத்தினைப் பற்றிக் கிடக்கின்ற குற்றங்கள்,
யோக நூல்களிற்கூறுகிற முறையிலே, வெளிப்பொருள்களில் ஈடுபட்ட மனத்தை உட்பொருளை நோக்கச் செய்து
1இயமம் நியமம் முதலிய முறைகளைக் கொண்ட அளவில் கழியக்கடவது என்றபடி.
பின், மலர் -
மலர்ந்து, மிசை - மேல் நோக்கி, எழுதரும் - கொழுந்து விட்டு மேன்மேல் எனக் கிளராநின்றுள்ள,
மனன் உணர்வு - மன அறிவு; இப்படி மலர்ந்து கொழுந்துவிட்டு மேன்மேல் எனக் கிளரா நின்றுள்ள மன
அறிவினால் அறியப்படுவதாக இருக்கும் உயிர்; அளவு இலன் - ‘அவ்வுயிரினுடைய அளவையுடையவன் அல்லன்
இறைவன். ‘உயிரின் தன்மை, மன அறிவினாலே அறியக்கூடியதாக இருக்கும்; இறைவன் தன்மை அங்ஙனம்
இராது,’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில் ஒரே இந்திரியத்தால் அறியப்படுகின்ற தன்மையும்
இல்லை என்கை. ‘எங்ஙனம்?’ எனின், பொன்னும் கரியும் முற்றும் வேறுபட்டு இருக்கவும், இவ்விரண்டனையும்
அறியுங் கருவியாகிய கண் ஒன்றாகவே இருக்கின்றது அன்றோ? அவ்வாறு, ஒரே பிரமாணத்தால் அறியத்தக்க
ஒப்புமையும் இல்லை என்கை. ‘ஆயின், 2‘மிக்க தூய்மையோடு கூடிய மனத்தால் அறியப்படுகிறான்
இறைவன்,’ என்னும் நூற்கருத்தோடு முரணாகாதோ?’
1. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை,
தியானம், சமாதி என்பன.
இவை யோகத்திற்குரிய எண்வகை உறுப்புகள்.
‘பொய்கொலை களவே காமம் பொருணசை
இவ்வகை ஐந்து
மடக்கிய தியமம்’.
‘பெற்றதற் குவத்தல்
பிழம்புநனி வெறுத்தல், கற்பன கற்றல்
கழிகடுந்தூய்மை, பூசனை பெறும் பயம் ஆசாற் களித்தலொடு,
நயனுடை
மரபின் நியமம் ஐந்தே’.
‘நிற்றல் இருத்தல்
கிடத்தல் நடத்தலென்று, ஒத்த நான்கினொல்கா
நிலைமையொடு, இன்பம் பயக்குஞ் சமய முதலிய, அந்தமில்
சிறப்பின்
ஆசனமாகும்.’
‘உந்தியொடு
புணர்ந்த இருவகை வளியும்
தந்த மியக்கந்
தடுப்பது வளிநிலை.
பொறிஉணர்
வெல்லாம் புறத்தின் வழாமை
ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே.
மனத்தினை
ஒருவழி நிறுப்பது பொறைநிலை
நிறுத்திய
அம்மனம் நிலைதிரி யாமல்
குறித்த
பொருளொடு கொளுத்துதல் நினைவே.
ஆங்ஙனம்
குறித்த அம்முதற் பொருளொடு
தான்பிற
னாகாத் தகையது சமாதி’
என்னுஞ் சூத்திரங்களை உணர்க.
2.
வேதவாக்கியம்.
|